top of page

பச்சை பயறு பெசரட்டு

Prep Time:

3Minutes

Cook Time:

3Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

பாசி பயறில் பீனாலிக் அமிலம், ப்ளவனாய்டுகள், காபிக் அமிலம், சின்னமிக் அமிலம் உள்ளிட்ட ஆன்டி ஆக்ஸிஜென்டுகள் உள்ளன. இந்த ஆன்டி ஆக்ஸிஜெனட்டுகள் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடைசெய்கின்றன. ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகள் நீண்டகால நோய்களான சர்க்கரை நோய், இதயநோய், புற்றுநோய் ஆகியவை ஏற்பட காரணமாகின்றது. எனவே நீண்டகால நோய்கள் ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்க நாம் பாசி பயறினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Ingredients

  • பாசிப்பயறு – 1 குவளை (100 கிராம்)

  • இஞ்சி – 1/2 இன்ச் துண்டு

  • சீரகம் – 1/2 தேக்கரண்டி

  • மிளகு - 1/2 தேக்கரண்டி

  • பெரிய வெங்காயம் – 1

  • இந்துப்பு - சுவைக்கேற்ப

Preparation

  • பெசரட்டு செய்வதற்கு முதல்நாள் மதியம் பாசிப்பயறை குறைந்தது 6 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். இரவு பயறை ஓரிரு முறை தண்ணீரில் அலசி கழுவி விட்டு ஒரு பருத்தித் துணியில் போட்டு சுற்றி வைக்கவும். மறுநாள் காலையில் அது முளைத்து இருக்கும். முளைகட்டிய பாசிப்பயறை மீண்டும் ஓரிரு முறை தண்ணீரில் கழுவி எடுத்து மிக்ஸியில் போடவும். அதனுடன் இஞ்சி சீரகம், மிளகு மற்றும் பெரிய வெங்காயத் துண்டுகளையும் போடவும். அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும். மாவை மற்றொருப் பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். மாவில் சுவைக்கேற்ப இந்துப்பை சேர்த்து நன்கு கலக்கவும்.

  • தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடானதும், மாவை தோசை போல் ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு வகை சட்னி அல்லது காய்கறி குருமாவுடன் சாப்பிடவும்.

bottom of page