top of page

தேன் திணை லட்டு

Prep Time:

15 Minutes

Cook Time:

15 Minutes

Serves:

3 Servings

Level:

Beginner

About the Recipe

இதயத்தைக் காக்கும். சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் இனிப்பான உபாயம் ஒன்று உண்டென்றால், அது `தேன்` மட்டுமே.
1 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல.
சுத்தத் தேனில் உள்ள தேன் மெழுகோ அல்லது மகரந்ததூளோ சிலருக்கு அலர்ஜி உண்டாக்கும், கவனம் தேவை.
வெப்பநிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் உடற் சூட்டைப் பொருத்து உட்கொள்ள வேண்டும்.

Ingredients

  • 150 கிராம் திணை அரிசி

  • 50 கிராம் தேன்

  • 3 ஸ்பூன் நெய்

  • 3 ஸ்பூன் தேங்காய் துருவல்

  • 8-10 முந்திரிபருப்பு

Preparation

  • திணை அரிசியை நன்றாக கழுவி தண்ணீரில் 1மணி நேரம் உற வைக்கவும்.

  • தண்ணீரை நன்றாக வடித்து விட்டு நிழலில் வெள்ளை காட்டன் துணியில் உலர்த்தவும்.

  • நெய் ஊற்றி தேங்காய் துருவலையும் முந்திரிபருப்பையும் வறுத்து எடுக்கவும்.

  • உலர்த்திய அரிசியை மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.

  • பின் ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு அதனுடன் வறுத்த தேங்காய் துருவல் மற்றும் முந்திரி பருப்பையும் போட்டு நன்றாக கலக்கவும்.

  • அந்த கலவையுடன் தேனை சேர்த்து நன்றாக பிசைந்து பின் சிறுசிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

bottom of page