top of page

தூய மல்லி சிக்கன் ரைஸ்

Prep Time:

15 Minutes

Cook Time:

30 Minutes

Serves:

3 Servings

Level:

Beginner

About the Recipe

மக்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளையும் ஈடேற்றும் தன்மைக் கொண்டது. இந்த நெல்லின் அரிசி மட்டுமல்லாது தவிடும் சத்து (Energy) மிகுந்து காணப்படுகிறது.
இது பலகாரவகைகளுக்கும் பழையச் சாதத்துக்கும் ஏற்றது.
இதன் நீராகாரம் இளநீர் (Tender Coconut) போன்று சுவையைத் தரக்கூடியதாகவும் கருதப்படுகிறது.

Ingredients

  • 300  கிராம் தூயமல்லி அரிசி

  • 4 டேபிள் ஸ்பூன் நெய்

  • 8 பச்சை மிளகாய் இரண்டாக உடைத்தது

  • 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

  • ½ கைப்பிடி அளவு புதினா, கொத்தமல்லித்தழை

  • 1 இன்ச் அளவு பட்டை

  • 4 இலவங்கம்

  • 4 ஏலக்காய்

  • 1 அன்னாசிப்பூ

  • 1 பிரியாணி இலை

  • ½ கப் கெட்டியான தேங்காய்ப் பால்

  • உப்பு

  • 4 சிக்கன் லெக் பீஸ்

  • 1/2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்

Preparation

  • முதலில் அரிசியைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின் முக்கால் பதம் வேக வைத்து வடிகட்டி தட்டில் கொட்டி மேலே 1 டேபிள்ஸ் பூன் நெய் தெளித்து ஆற விடவும்.

  • ஒரு வாணலியில் மீதமுள்ள நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரியாணிஇலை, அன்னாசிப்பூ போட்டு வதக்கி இதில் சிக்கனைப் போட்டு நன்கு வதக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், இஞ்சிபூண்டு விழுது, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் மூடி வைத்து சிம்மில் 10 நிமிடம் வேக வைக்கவும்.

  • முக்கால் பதம் வெந்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து 5 நிமிடம் சிம்மில் வைத்து வேக வைக்கவும். புதினா சேர்க்கவும். பின்னர் ஆறின சாதத்தைக் கொட்டி நன்கு கலந்து மூடி அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்.

  • நன்கு கலந்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

bottom of page