top of page

தூயமல்லி அரிசி மட்டன் பிரியாணி

Prep Time:

10Minutes

Cook Time:

45Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

நமது உடலில் பல்வேறு நோய்கள் ஏற்பட முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருப்பது, இரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது தான்.
தூயமல்லி அரிசியை சாதமாக எடுத்துக்கொள்ளும் பொழுது, உடலில் இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இதனால் பல்வேறு நோய்கள் நம்மை அண்டாது.
அதுமற்றுமின்றி இதை சாப்பிடும் பொழுது உடலுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.

Ingredients

  • 1 கிலோ தூயமல்லி அரிசி

  • முக்கால் கிலோ ஆட்டு இறைச்சி

  • சிறிது கறிவேப்பிலை

  • மூன்று வெங்காயம் நறுக்கியது

  • நான்கு பெரிய ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்

  • இரண்டு தக்காளி நறுக்கியது

  • ஒரு கட்டு புதினா மல்லித்தழை

  • பெரிய ஸ்பூன் தயிர் நான்கு

  • பனிரெண்டு பச்சை மிளகாய் நறுக்கியது

  • இரண்டு ஸ்பூன் தனியாபவுடர்

  • சிறிது வெண்ணை

  • ஆறு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

  • அரை பழம் எழமிச்சை சாறு

  • ஒரு ஸ்பூன் கரம் மசாலா

  • சிறிது பட்டை, ப்ரிஞ் இலை,கிராம்பு,ஏலக்காய்

  • உப்பு

  • தண்ணீர்

Preparation

  • குக்கரில் வெண்ணை, எண்ணெய் சேர்த்து பட்டை வகை சேர்த்து கறிவேப்பிலை,வெங்காயம்,இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய்,தக்காளி,உப்பு, மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.

  • பின் இறைச்சி சேர்த்து புதினா மல்லி இலை சேர்த்து தயிர் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

  • பின் கழுவிய அரிசியை சேர்த்து இரண்டு பங்கு தண்ணீர் ஊற்றி எழுமிச்சை பிழிந்து கலந்து மூடி மூன்று விசில் வைக்கவும்.

  • இறக்கிய பின் ஓரு ஸ்பூன் நெய் விட்டு பரிமாறவும்.

bottom of page