top of page

தூயமல்லி அரிசி புலாவ்

Prep Time:

10Minutes

Cook Time:

30Minutes

Serves:

6Servings

Level:

Beginner

About the Recipe

நமது உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று வலிமை தான். எவ்விதமான சூழல்களையும் தாங்கி வாழ, உடல் வலிமை மிக முக்கியம். தூயமல்லி அரிசி, நமது உடலில் உள்ள அனைத்து உள்ளுறுப்புகளையும் வலுவடைய செய்யும் தன்மைக்கொண்டது. இதனால் நமது உடலானது வலுவாக இருக்கும்.

Ingredients

  • 2 கப் தூயமல்லி அரிசி

  • 2 பெரிய வெங்காயம்

  • 1 தக்காளி

  • 1 கை அளவு கொத்தமல்லி

  • 1 கை அளவு புதினா

  • 4 பச்சை மிளகாய்

  • 100 மில்லி தேங்காய் எண்ணெய்

  • தேவையான அளவு உப்பு

  • 1 சின்ன பீஸ் கல்பாசி

  • 2 துண்டு பட்டை

  • 3 லவங்கம்

  • 4 ஏலக்காய்

  • 11/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்

  • 4 கப் தண்ணீர்

  • 3 டேபிள் ஸ்பூன் தயிர்

Preparation

  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை ,கிராம்பு ,ஏலக்காய், கல்பாசி இவை அனைத்தையும் சேர்த்து தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

  • தூயமல்லி அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  • வெங்காயம் கண்ணாடி போல் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.


  • நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்.

  • இவை வதங்கியதும் தண்ணீர், தயிர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி வரும் வரை கொதிக்க விடவும்.

  • தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்துள்ள அரிசியை வடிகட்டி கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும்.

  • ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அரை தீயில் வைத்து அரிசியை வேகவிடவும்.

  • அரிசி வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும் இப்போது தூயமல்லி புலாவ் தயார்.

bottom of page