top of page

தூயமல்லி அரிசி கொழுக்கட்டை

Prep Time:

15Minutes

Cook Time:

22Minutes

Serves:

8Servings

Level:

Beginner

About the Recipe

சிலருக்கு சாப்பிடும் உணவுகள் சரியாக செரிக்காமல் அதனால் பல்வேறு வயிற்று உபாதைகளுக்கு ஆளாகி கஷ்டப்படுவார்கள். அவர்களுக்கு இந்த தூயமல்லி அரிசி மிகவும் ஏற்றது. அதாவது, தூயமல்லி அரிசி விரைவில் ஜீரணமடையும் தன்மைக்கொண்டது. இதனால் ஜீரணத்தில் எவ்விதமான இடையூறும் ஏற்படாது.

Ingredients

  • 1 கப் தூயமல்லி அரிசி

  • 1 பொடியாக நறுக்கிய வெங்காயம்

  • 3 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்

  • 1 பொடியாக நறுக்கிய வர மிளகாய்

  • சிறிது கருவேப்பில்லை.

  • சிறிது கொத்தமல்லி தழை

  • 2 ஸ்பூன் துருவிய தேங்காய்

  • உப்பு


  • 3 ஸ்பூன் நல்லெண்ணெய்

  • 1/2 ஸ்பூன் கடுகு

  • 1/2ஸ்பூன் சீரகம்

  • 1 ஸ்பூன் உளுந்து

Preparation

  • தூயமல்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின் அரிசியை கரகரப்பாக மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும்.

  • ஒரு அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து லேசாக பொன்னிறமாக வதக்கி உப்பு சேர்க்கவும்.

  • அதனுடன் அரைத்த தூயமல்லி அரிசி மாவை சேர்த்து சிறு தீயில் கிளறவும்.

  • மாவு கெட்டிப்பட்டதும் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும். சிறிது ஆறியதும் கை பொறுக்கும் சூட்டில்

    கொழுக்கட்டைகளாக உருட்டி ஆவியில் ஒரு 7 நிமிடம் முதல் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

  • அவ்வளவுதான் சூடான சுவையான சத்தான தூயமல்லி அரிசி கொழுக்கட்டை தயார்.

bottom of page