top of page

தூயமல்லி அரிசி கல்கண்டு பொங்கல்

Prep Time:

10Minutes

Cook Time:

35Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும், தான் சாப்பிடும் உணவுகளை கவனித்து சாப்பிட வேண்டும். இவர்கள் சாதத்தை அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கூற கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
ஆனால், தூயமல்லி அரிசியை உணவாக எடுத்துக்கொள்ளும் பொழுது, அவர்களின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவானது அதிகரிப்பதில்லை. அதனால், இந்த அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்ற ஒன்றாகும்.

Ingredients

  • ஒரு கப் காய்ச்சிய பால்

  • ஒரு கப் தூயமல்லி புழுங்கல் அரிசி

  • ஒரு கப் கல்கண்டு

  • அரை கப் தண்ணீர்

  • நெய், முந்திரி, திராட்சை

  • ஒரு துளி உப்பு

Preparation


  • ஒரு சட்டியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

  • பின் அந்த சட்டியில் பாலும் தண்ணீரும் ஊற்றி மிதமான தீயில் வைக்கவும்.கல்கண்டு சேர்க்கவும்.

  • கரைந்தவுடன் தூயமல்லி அரிசி சேர்த்து ஒரு துளி உப்பு சேர்க்கவும்.

  • நன்றாக வெந்தவுடன் கெட்டியாகும் வரை கிளறவும்.

  • முந்திரி திராட்சை சேர்த்து கிளறி நெய் சேர்த்து பரிமாறவும்.

bottom of page