top of page

தூயமல்லி அரிசி கற்கண்டு பொங்கல்

Prep Time:

10 Minutes

Cook Time:

30 Minutes

Serves:

2 Servings

Level:

Beginner

About the Recipe

மக்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளையும் ஈடேற்றும் தன்மைக் கொண்டது. இந்த நெல்லின் அரிசி மட்டுமல்லாது தவிடும் சத்து (Energy) மிகுந்து காணப்படுகிறது.
அதிக நோய் எதிர்ப்புச் (Immune Power) சக்திக் கொண்ட இது பலகாரவகைகளுக்கும் பழையச் சாதத்துக்கும் ஏற்றது.
இதன் நீராகாரம் இளநீர் (Tender Coconut) போன்று சுவையைத் தரக்கூடியதாகவும் கருதப்படுகிறது.

Ingredients

  • ஒரு கப் காய்ச்சிய பால்

  • ஒரு கப் தூயமல்லி அரிசி வேக வைத்தது

  • ஒரு கப் கற்கண்டு

  • அரை கப் தண்ணீர்

  • நெய், முந்திரி, திராட்சை

  • ஒரு துளி உப்பு

Preparation

  • ஒரு சட்டியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

  • பின் அந்த சட்டியில் பாலும் தண்ணீரும் ஊற்றி மிதமான தீயில் வைக்கவும். கற்கண்டு சேர்க்கவும்.

  • கரைந்தவுடன் வேக வைத்த தூயமல்லி அரிசி சேர்த்து ஒரு துளி உப்பு சேர்க்கவும்.

  • நன்றாக வெந்தவுடன் கெட்டியாகும் வரை கிளறவும்.

  • முந்திரி, திராட்சை, நெய் சேர்த்து கிளறவும்.

bottom of page