top of page

தூயமல்லி அரிசி கஞ்சி

Prep Time:

1Minutes

Cook Time:

20Minutes

Serves:

3Servings

Level:

Beginner

About the Recipe

சிலருக்கு உடலில் உள்ள வாதம், பித்தம் மற்றும் கபமானது சரியான அளவில் இருக்காது. இதனால் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகி தவிப்பார்கள். தூயமல்லி அரிசி, நமது உடலை வாதம், பித்தம் மற்றும் கபத்தை சரியான அளவில் கட்டுக்குள் வைத்திருக்கும். பித்தத்தால் ஏற்படும் வாந்தியை நிறுத்தும் தன்மைக்கொண்டது.

Ingredients

  • 1/4 கப் தூயமல்லி அரிசி

  • 1 டேபிள் ஸ்பூன் தயிர்

  • உப்பு தேவையான அளவு

  • 4 கப் தண்ணீர்

Preparation

  • முதலில் தூயமல்லி அரிசியை நன்கு கழுவி, ஒரு துணியில் போட்டு பேன் காற்றில் ஆறவிட்டு எடுத்து, ஒரு கடாயில் சேர்த்து வறுத்து, (படக் சவுண்ட் வரும் வரை வறுக்கவும்) சூடாறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடராக அரைத்துக்கொள்ளவும்.

  • பின்னர் ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து, நான்கு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கும் போது மாவை கொஞ்சம் தண்ணீரில் கலந்து கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கலக்கவும் (அரிசி மாவு அடிபிடிக்க வாய்ப்புள்ளது). அரைத்த அரிசிப் பொடியை சேர்த்து கைவிடாது கலக்கவும்.

  • மிதமான சூட்டில் வைத்துக்கொண்டு கலக்கவும்.

  • அரிசி மாவு சேர்த்து கலந்து கொதிக்கும் போது, மாவு நன்கு வெந்து கஞ்சி பதம் வந்தவுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.தயிர் சேர்த்து பருகலாம்.


bottom of page