top of page

திணை அரிசி பீட்ரூட் தோசை

Prep Time:

20Minutes

Cook Time:

4Minutes

Serves:

9Servings

Level:

Intermediate

About the Recipe

உடலின் தசைகளின் வலுவிற்கும், சருமத்தின் மென்மைக்கும் மிகவும் அவசியமாகும். திணை புரதச்சத்து அதிகம் நிறைந்த உணவாகும். திணை கொண்டு செய்யப்பட்ட உணவு வகைகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடலில் தசைகள் நன்கு வலுபெறும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமை தன்மையை காக்கும்.

Ingredients

  • 2 கப் திணை

  • 2 மேஜைகரண்டி அரிசி

  • ½ கப் முழு உளுந்து

  • 1 தேக்கரண்டி வெந்தயம்

  • ½ கப் பீட்ரூட் வேகவைத்து துருவியது

  • 1 அங்குலம் இஞ்சி தோலுரித்தது

  • 4 பச்சை மிளகாய்

  • ½ கப் வெங்காயம் பொடியாக நறுக்கியது

  • 2 மேஜைகரண்டி கொத்தமல்லி பொடியாக நறுக்கியது

  • 1 தேக்கரண்டி ஈஸ்ட்

  • தேவையான எண்ணெய்

  • தேவையான உப்பு

Preparation



  • தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்.

  • மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் திணை, அரிசி லேசாக வறுக்கவும். பொறிந்து வாசனை வரும். வேறொரு பாத்திரத்திக்கு மாற்றி 6 கப் நீர் சேர்த்து ஊறவைக்க. உளுந்து,வெந்தயம் 3 கப் நீரில் 1 மணி நேரமாவது ஊறவேண்டும்.வடித்து நீர் சேர்த்து முதலில் உளுந்து வெந்தயம் பிளெண்டரில் போட்டு மழமழவென்று அரைக்கவும். பின் திணை, அரிசி, பீட்ரூட், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து அரைக்க. மாவுகளை ஒன்றாக சேர்க்க.

  • அன்றே தோசை செய்ய ஈஸ்ட் சேர்க்கவும். ஈஸ்ட் சேர்த்து சுத்தமான கையால் ஒன்றாக கலக்க. 4 மணி நேரத்தில் பொங்கிவிடும். தேவையான உப்பு சேர்த்து கிளறவும்.தோசைக் கல்லை மிதமான நெருப்பின் மேல் வைத்து சூடான பின், எண்ணெய் தடவி எப்பொழுதும் தோசை செய்வது போல 1 கப் மாவில் ஒரு தோசை செய்க. தோசை மேல் பரவலாக ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றுக. இரண்டு பக்கமும் பொன் சிவப்பாக வேண்டும். 2-3 நிமிடங்களில் சுவையான சத்தான வாசனையான தோசை தயார்.

  • சாம்பாரோடோ, மிளகாய் பொடியுடனோ அல்லது விருப்பமான சட்னியோடோ பரிமாறுக. சின்ன பசங்களுக்கு தோசையுடன் ஜாம் சேர்தது பரிமாறலாம்.

bottom of page