top of page

திணை வெஜ் பிரியாணி

Prep Time:

15Minutes

Cook Time:

20Minutes

Serves:

4Servings

Level:

Intermediate

About the Recipe

கண்களுக்கு நன்மையளிக்கும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இதனால் கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும். இதனால் பார்வை தெளிவடையும்.

Ingredients

  • 200 கிராம் திணை அரிசி

  • 2 பெரிய வெங்காயம்

  • 2 பச்சை மிளகாய்

  • 3 தக்காளி

  • கேரட்-2, பீன்ஸ்-15, உருளைக்கிழங்கு-1, நூல்கோல்-1

  • புதினா இலை சிறிதளவு

  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

  • கறிவேப்பிலை சிறிதளவு

  • 3 டேபூள் ஸ்பூன் எண்ணெய்

  • நெய் 2 டேபூள் ஸ்பூன்

  • 1 டீஸ்பூன் கடுகு, சீரகம்,மிளகு

  • 1 பட்டை, கிராம்பு,ஏலக்காய்

  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்

  • 2 டீஸ்பூன் வரமிளகாய் தூள்

  • 1 டீஸ்பூன் கரமசாலா

  • 1/2 டீஸ்பூன் பெருங்காயம் தூள்

  • 1 சிட்டிகை சர்க்கரை

Preparation

  • திணை அரிசி நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.

  • பெரிய வெங்காயம்,பச்சை மிளகாயை,தக்காளி, கேரட், பீன்ஸ்,உளுளைக்கிழங்கு அனைத்தையும் பொடியாக அரிந்து கொள்ளவும்.

  • ஒரு குக்கரில் எண்ணெய்,நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய்,கடுகு,சீரகம்,மிளகு சேர்த்து நன்றாக வதக்கவும்.

  • பிறகு இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி,மிளகாய், கறிவேப்பிலை, காய்களை சேர்த்து நன்றாக வதக்கவும்.

  • பிறகு வதங்கியதில் புதினா இலை,திணை அரிசி சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொள்ளவும்.

  • அதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு மஞ்சள் தூள், வரமிளகாய் தூள்,கரமசாலா, உப்பு ஒரு சிட்டிகை, சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விட்டு குக்கரை 3 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.

  • ஆரோக்கியமான திணை அரிசி பிரியாணி ரெடி.

bottom of page