top of page

திணை மாவிளக்கு

Prep Time:

25Minutes

Cook Time:

10Minutes

Serves:

9Servings

Level:

Advanced

About the Recipe

திணை வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்தது. நமது உடலுக்கு அனைத்து வகையான வைட்டமின் சத்துகள் தேவையென்றாலும், வைட்டமின் பி 1 சத்து மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனெனில் இந்த வைட்டமின் பி 1 சத்து இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள், நரம்புகளின் சரியான செயல்பாட்டை உறுதி செய்கிறது. இதயத் தசைகளையும் வலுப்படுத்தி இதயம் சம்பந்தமான எத்தகைய நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது.

Ingredients

  • 1/2 கிலோ திணை அரிசி

  • 100 மில்லி தேன்                                       

  • 1/4 கிலோ வெல்லம்

  • 15 ஏலக்காய்

  • 5 கிராம் சுக்கு

Preparation

  • திணையை மூன்று முறை கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் வரை ஊறவிடவும். பின் தண்ணீரை வடிகட்டி சுத்தமான மஸ்லின் துணியில் பரப்பி உலரவிடவும்.

  • லேசா ஈரம் இருக்கும் போது வெறும் வாணலியில் மணம் வர வறுத்து ஆறவிட்டு ஏலக்காய் சுக்குத் தூள் சேர்த்து பொடி செய்து ஜலித்து கொள்ளவும்

  • வெல்லத்துடன் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு வெல்லம் கரைந்ததும் இறக்கி வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விட்டு ஒரு கம்பி பாகு எடுக்கவும் பின் இறக்கி அந்த சூட்டிலே தேன் கலந்து கொள்ளவும் பின் மாவில் சிறிது சிறிதாக ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்.

  • நன்கு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொண்டு உருட்டி நடுவில் குழி போடவும்.

  • சுவையான ஆரோக்கியமான மணமான திணை மாவிளக்கு ரெடி.

bottom of page