top of page

திணை புட்டு

Prep Time:

20Minutes

Cook Time:

20Minutes

Serves:

3Servings

Level:

Intermediate

About the Recipe

திணை நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தக்கூடியது. நரம்புகளுக்கு வலு கொடுத்து முறுக்கேற்றும் குணம் கொண்டது. இளவயது ஆண்களுக்கு அடிக்கடி திணை அரிசியில் செய்த திணை உப்புமா, லட்டு, புட்டு, கஞ்சி , திணை முறுக்கு, தேனுடன் கலந்த திணை என்று விதவிதமாக செய்து கொடுப்பார்கள். இதனோடு திணையை இடித்து தேன் கலந்து களியாக்கி கொடுப்பார்கள். இது ஆண்மையை பெருக்கவும் உதவும்.

Ingredients

  • ஒரு டம்ளர் திணை அரிசி

  • அரைகப் நாட்டுச் சர்க்கரை

  • ஒரு கப் துருவிய தேங்காய்

  • ஏலக்காய் தூள் சிறிதளவு

Preparation

  • திணை அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியை உலற வைத்து மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி தயாராக எடுத்துக் கொள்ளவும்

  • புட்டு மாவை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரை டம்ளர் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து புட்டு மாவை பிசறி எடுக்கவும்.

  • புட்டு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். புட்டு குழலில் தேங்காய் மற்றும் புட்டு மாவின் மாற்றி மாற்றி நிரப்பவும்.

  • புட்டுக் குழாயை அடுப்பில் வைத்து 15 நிமிடம் வேக விடவும். அடுப்பிலிருந்து இறக்கி வைத்து ஒரு பிளேட்டுக்கு மாற்றவும்.

  • திணை புட்டுடன் தேங்காய் துருவல் நாட்டுச்சர்க்கரை ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து சாப்பிடலாம்.

bottom of page