top of page

திணை பிஸ்கெட்

Prep Time:

30Minutes

Cook Time:

30Minutes

Serves:

10Servings

Level:

Advanced

About the Recipe

அதிகமான கோபம், கவலை போன்ற உணர்வுகள் நமது உடல் மற்றும் மனதில் சில பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. சிறிது காலத்தில் இவை மன அழுத்தம் பிரச்சனையாக உருவாகிறது. திணை தானியத்தில் மன அழுத்ததை குறைக்க கூடிய வேதி பொருட்கள் அதிகம் உள்ளன. எனவே திணை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது மன அழுத்த பிரச்சனைக்கு சிறந்த ஒரு நிவாரணமாகும்.

Ingredients

  • 200 கிராம் திணை மாவு

  • 100 கிராம் கோதுமை மாவு

  • 150 கிராம் சர்க்கரை

  • 60 கிராம் வெண்ணெய்

  • 40 மில்லி சூடான எண்ணெய்

  • 3 டேபிள் ஸ்பூன் பால்

  • 1 ஸ்பூன் பேக்கிங் பவுடர்

  • 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா

  • 1 டேபிள் ஸ்பூன் கார்ன்ப்ளார்

  • 3 டேபிள் ஸ்பூன் பால் பவுடர்

  • 30 மில்லி ரோஸ் சிரப்

  • 1 ஸ்பூன் வென்னிலா எசென்ஸ்

Preparation

  • திணை மாவுடன் கோதுமை மாவு, கார்ன்ப்ளார், பால் பவுடர் ,பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கொள்ளவும். பின் சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடி செய்து இதனுடன் கலந்து கொள்ளவும்.

  • பின் இதை மூன்று முறை ஜலித்து கொள்ளவும். பின் இதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  • பின் வென்னிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் சூடான எண்ணெய் ஊற்றி நன்றாக அழுத்தி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

  • அதில் சிறிது ரோஸ் சிரப் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பின் ஹார்ட் வடிவ பிஸ்கெட் கட்டரை பயன்படுத்தி ஹார்ட் வடிவில் ஷேப் செய்து கொள்ளவும்.

  • பின் இதை பேக்கிங் ட்ரேயில் பட்டர் தடவி பட்டர் பேப்பர் போட்டு ரெடியா உள்ள ட்ரேயில் இடைவெளி விட்டு அடுக்கி கவர் சுற்றி ஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வரை வைக்கவும் பின் 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் வரை ஓவனை சூடாக்கவும் பின் 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடமும் 140 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 8 நிமிடமும் வைத்து பேக் செய்யவும்.

  • சுவையான ஆரோக்கியமான இரண்டு விதமான திணை பிஸ்கெட் ரெடி.

bottom of page