top of page

திணை பக்கோடா

Prep Time:

20Minutes

Cook Time:

10Minutes

Serves:

5Servings

Level:

Intermediate

About the Recipe

திணை புரதசத்துக்கள் அதிகம் கொண்டது. அதே நேரத்தில், கொழுப்பு சத்து அறவே இல்லாத சில வகை உணவுகளில் இதுவும் ஒன்றாகும். திணையை அடிக்கடி சாப்பிட்டு வர உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவை சமநிலையில் வைக்கும். தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை அதிகம் கூடாமல் தடுத்து, உடல் நலத்தை காக்கும்.

Ingredients

  • 100 கிராம் திணை மாவு

  • 50 கிராம் கடலை மாவு

  • 25 கிராம் அரிசி மாவு

  • 4 பெரிய வெங்காயம்

  • 2 பச்சை மிளகாய்

  • 1 துண்டு இஞ்சி

  • கருவேப்பில்லை

  • எண்ணெய்

Preparation

  • திணையை மிக்சியில் அரைத்து சலித்துக் கொள்ளவும்.

  • ஒரு பவுலில் 3 கொத்து கருவேப்பிலை, நீள்வாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கையால் உதிர்த்து விடவும்.

  • அடுத்து நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்க்கவும்.

  • அடுத்து அதில் திணை மாவு, கடலை மாவு,

    அரிசி மாவு, உப்பு சேர்க்கவும்.

  • பிறகு நன்கு மிக்ஸ் பண்ணவும். அதில் 3ஸ்பூன் நன்கு காய்ச்சிய ஆயில் சேர்த்து ஸ்பூனால் மிக்ஸ் பண்ணவும். அடுத்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

  • ஒரு வாணலியில் ஆயில் ஊற்றி சூடானதும் பக்கோடா போல் கையால் உதிர்த்து விடவும். ஹை பிளேமில் வைத்தே பொரிக்கவும்.

  • நன்கு கிருஸ்பியாக வரும் வரை வேகவைத்து எடுக்கவும். சூப்பரான ஸ்வீட் ஸ்டால் பக்கோடா ரெடி.

bottom of page