top of page

திணை தோசை

Prep Time:

20Minutes

Cook Time:

3Minutes

Serves:

15Servings

Level:

Beginner

About the Recipe

ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் உடலில் இருக்கும் அனைத்து எலும்புகளும் நன்கு வலுவுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். திணை, கால்சியம் சத்துக்களை தன்னகத்தே அதிகம் கொண்ட ஒரு தானியமாகும். திணை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வர எலும்புகள் உறுதியாகும். அடிபட்டு எலும்பு உடைந்தவர்கள் திணை உணவுகளை சாப்பிட்டு வர விரைவில் கூடும்.

Ingredients

  • திணை அரிசி – 3கப்


  • உளுந்து -1 கப்


  • வெந்தயம் – ஸ்பூன்

Preparation

  • திணை அரிசியை நன்கு கழுவி தனியாக ஊறவைக்கவும்.உளுந்தையும் வெந்தயத்தையும் ஒன்றாக ஊறவைக்கவும். 2 மணி நேரத்துக்குப் பிறகு அரிசியை கொரகொரவென அரைக்கவும்.

  • உளுந்தை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து புசுபுசுவென அரைக்கவும்.

  • இரண்டு மாவையும் ஒன்றாக தேவையான அளவு உப்பு சேர்த்துக் கரைக்கவும். கரைத்த மாவை ஏழு மணி நேரம் வரை புளிக்க விடவும் அல்லது இரவு படுக்கும் முன் கரைத்து வைத்தால் காலையில் நன்றாகப் புளித்து மாவு பொங்கி இருக்கும்.

  • அடுப்பில் தோசைக் கல்லை வைத்துச் சூடானதும் மெல்லிய தோசைகளாக வார்த்து எடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.

bottom of page