top of page

திணை கொழுக்கட்டை

Prep Time:

10Minutes

Cook Time:

10Minutes

Serves:

3Servings

Level:

Beginner

About the Recipe

திணை அரிசி புரதசத்து அதிகம் கொண்டது. அதே நேரத்தில், கொழுப்பு சத்து அறவே இல்லாதது. திணை அடிக்கடி சாப்பிட்டு வர உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவை சமநிலையில் வைக்கும். தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை அதிகரிக்காமல் தடுத்து, உடல் நலத்தை காக்கும்.

Ingredients

  • 1 கப் திணை மாவு

  • ½ கப் துருவிய தேங்காய்

  • ½ கப் வெல்லம் (அ) நாட்டு சர்க்கரை

  • ½ ஸ்பூன் ஏலக்காய் பொடி

  • 2 ஸ்பூன் நெய்

  • தேவையானஅளவு வெதுவெதுப்பான நீர்

Preparation

  • முதலில் திணை மாவை நெய் விட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

  • அத்துடன் துருவிய தேங்காய், நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

  • பின் வெதுவெதுப்பான நீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.

  • விருப்பமான வடிவில் இட்லி தட்டில் வேக வைக்கவும்.

  • சுவையான சிற்றுண்டி தயார்.

bottom of page