top of page

திணை கீர்

Prep Time:

5Minutes

Cook Time:

30Minutes

Serves:

7Servings

Level:

Intermediate

About the Recipe

திணையில் ஏராளமான பி வைட்டமின்கள் (B1, B2, B3 & B9) உள்ளன. பி வைட்டமின்கள் உங்கள் நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன மற்றும் உங்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன.

Ingredients

  • 1/2 கப் திணை

  • 2-1/4 கப் பால்

  • 2 டேபிள்ஸ்பூன் நெய்

  • 1/2 கப் நாட்டுச்சர்க்கரை

  • 1/2 கப் பாதாம்,முந்திரி, பிஸ்தா, சாரப்பருப்பு

Preparation

  • திணையை 5 முறை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். வாணலியில் நெய் விட்டு நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, சாரப்பருப்பு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

  • மற்றொரு பாத்திரத்தில் பாலை ஊற்றி பால் நன்றாக கொதித்து வந்த பிறகு ஊறவைத்த திணையை தண்ணீர் வடிகட்டி இதில் சேர்த்து குறைந்த தீயில் 15 நிமிடம் வேக வைக்கவும்.

  • பாலுடன் சேர்த்து திணை நன்றாக வெந்த பிறகு இதில் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கரைந்த பிறகு, வறுத்து கலவையை இதில் சேர்த்து குறைந்த தீயில் 2 நிமிடம் வைக்கவும்.

  • சுவையான திணை கீர் தயார்.

bottom of page