top of page

திணை எலுமிச்சை சாதம்

Prep Time:

10Minutes

Cook Time:

20Minutes

Serves:

2Servings

Level:

Beginner

About the Recipe

இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுவதோடு, கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனையான மலச்சிக்கலைத் தடுக்கவும் திணை
உதவுகிறது. இதில் இரும்புச்சத்தும் வைட்டமின் B உட்பட பிற அத்தியாவசிய தாதுக்களும் நிறைந்திருப்பதால், தாய்க்கும் வளரும் குழந்தைக்கும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Ingredients

  • 1 கப் திணை

  • 3/4 ஸ்பூன் லெமன் சாறு

  • 1/2 ஸ்பூன் உளுத்தம்பருப்பு

  • 25 மில்லி எண்ணெய்

  • 1/2 ஸ்பூன் கடுகு

  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்

  • 2 ஸ்பூன் கடலை பருப்பு

  • 3 ஸ்பூன் வேர்க்கடலை

  • 2 கொத்து கருவேப்பிலை

  • 1 சிட்டிகை பெருங்காயம்

  • 2 வரமிளகாய்

  • சிறிதளவு கொத்தமல்லி

Preparation

  • முதலில் திணையை 1 மணி நேரம் தண்ணீரில் சேர்த்து ஊறவைக்கவும். பிறகு அதை குக்கரில் 2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு வேகவைக்கவும்.

  • பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய், வேர்க்கடலை, கருவேப்பிலை, பெருங்காயம், எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.

  • பிறகு அதில் மஞ்சள் தூள், கொத்தமல்லி சேர்த்து கலக்கவும்.

  • பிறகு வேக வைத்துள்ள திணை சேர்த்து கிளறவும்.

  • இப்பொழுது சுவையான திணை எலுமிச்சை சாதம் தயார்.

bottom of page