top of page

திணை உப்புமா

Prep Time:

10Minutes

Cook Time:

25Minutes

Serves:

5Servings

Level:

Beginner

About the Recipe

அல்சைமர் நோய் என்பது ஒரு வகையான தீவிரமான ஞாபக மறதி நோயாகும். இந்நோய் வந்தவர்கள் பல சமயங்களில் தங்களையே மறந்து விடும் நிலைக்கு சென்று விடுவர். திணை, மூளை செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, ஞாபகத்திறனை மேம்படுத்தும் சக்தியை அதிகம் கொண்டிருப்பதால், அதை சாப்பிட்டு வருபவர்களுக்கு அல்சைமர் நோய் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவதாக மேலை நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Ingredients

  • 200 கிராம்  திணை

  • 1  பெரிய வெங்காயம்

  • 2 பச்சை மிளகாய்

  • 1 சிறிய தக்காளி

  • 1 சிறிய துண்டு பட்டை

  • 1/2 டீ ஸ்பூன் சோம்பு

  • சிறிதளவு கருவேப்பிலை, கொத்தமல்லி இலை

  • தேவையான அளவு உப்பு

  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

  • 1 டீஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு


Preparation

  • திணை எடுத்து லேசாக சூடு ஏற வறுத்துக் கொள்ளவும். பிறகு அதில் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.   பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய் அரிந்து கொள்ளவும். ஒரு தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு ,சோம்பு, ஒரு பட்டை இவற்றை சேர்த்து சிவக்க விடவும். பிறகு பெரிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  • பிறகு வதங்கிய பொருட்களில் 3 மடங்கு தண்ணீர் சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும். பிறகு ஊற வைத்த திணையின் தண்ணீரை வடித்து விட்டு சேர்த்து நன்கு கலந்து விட்டு குக்கரை மூடவும். ஒரு சவுண்ட் அதிக ஃப்லேமில் விடவும். மீதி இரண்டு சவுண்ட் மிதமான ஃப்ளேமில் விடவும். பிறகு ஸ்டவ்வை ஆப் செய்யவும். ஆவி அடங்கியபின் திறந்து அதில் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து விடவும். சூடாக இருக்கும் பொழுது சட்னி அல்லது தயிர் தொட்டு சாப்பிடலாம்.

bottom of page