top of page

திணை இனிப்பு பொங்கல்

Prep Time:

7Minutes

Cook Time:

25Minutes

Serves:

6Servings

Level:

Beginner

About the Recipe

திருமணமான ஆண்கள் சிலருக்கு மலட்டு தன்மை ஏற்பட்டு குழந்தை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு தவிக்கின்றனர். திணையை மாவாக நன்கு இடித்து, அந்த மாவில் பசும் நெய் கலந்து, களியாக கிண்டி சாப்பிட்டு வந்தால் உடலில் நரம்புகள் முறுக்கேறும். உயிரணுக்களின் உற்பத்தி அதிகரித்து மலட்டு தன்மை நீங்கும். நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகள், ஆண்மை குறைபாடுகள் போன்றவை நீங்கும்.

Ingredients

  • ஒரு டம்ளர் திணை அரிசி

  • அரை டம்ளர் பாசிப்பருப்பு

  • ஒரு டம்ளர் வெல்லம்

  • 2 டேபிள் ஸ்பூன் நெய்

  • 10 முந்திரி

  • 10 திராட்சை

  • ஒரு ஏலக்காய்

Preparation

  • திணை அரிசி ,பாசிப்பருப்பு இவற்றை கழுவி சுத்தம் செய்து 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் 3 விசில் விட்டு இறக்கி, பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு கலக்கவும்.


  • வறுத்த முந்திரி திராட்சைகளை திணை பொங்கலுடன் சேர்த்து நன்கு கிளறி விடவும். 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறி விடவும்.

  • சுவையான திணை இனிப்பு பொங்கல் தயார்.

bottom of page