top of page

திணை இட்லி

Prep Time:

25Minutes

Cook Time:

10Minutes

Serves:

10Servings

Level:

Intermediate

About the Recipe

உடலின் உஷ்ணம் தட்ப வெப்ப மாறுபாடுகளால் அதிகரிப்பதாலும், நோய் தொற்றுகளாலும் ஜுரம் போன்ற நோய்கள் உடலை மிகவும் பலவீனபடுத்தும் காலரா போன்ற நோய்களும் உண்டாகின்றன. ஜுரம், காலரா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திணை கஞ்சி, களி போன்ற்வவற்றை கொடுத்து வருவது சிறந்த உணவாக இருக்கும்.

Ingredients

  • 3 பங்கு இட்லி அரிசி

  • ஒரு பங்கு திணை அரிசி

  • ஒரு பங்கு உளுந்து

  • ஒரு டீஸ்பூன் வெந்தயம்

  • உப்பு தேவையான அளவு

Preparation

  • இட்லி அரிசி மற்றும் திணை அரிசி நன்கு கழுவி 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

  • உளுந்து மற்றும் வெந்தயத்தை நன்கு கழுவி தனியாக 1 மணி நேரம் ஊற வைக்கவும்

  • அரிசி மாவை சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். பிறகு உளுந்து அரைத்து எடுத்த பின் ஒன்றாக உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். ஆறு மணி நேரம் நன்கு புளிக்க வைக்கவும்.

  • இந்தத் திணை அரிசி மாவில் இட்லி, தோசை, காரப்பணியாரம்,ஊத்தப்பம் செய்வதற்கு இந்த மாவு கலவை சரியாக இருக்கும்.

  • இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் மாவை ஊற்றி 10 நிமிடம் வேக வைக்கவும்.

bottom of page