top of page

திணை அல்வா

Prep Time:

5Minutes

Cook Time:

20Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

மாறி வரக்கூடிய உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக இன்றைய தலைமுறை ஆண்கள் பலரும் உயிரணு குறைபாடு மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படிப்பட்டவர்கள் திணை மாவுடன் சிறிது நெய் சேர்த்து களியாக சாப்பிட்டு வர ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ஆண்மை குறைபாடு நீங்கும்.

Ingredients

  • 1 கப் திணை

  • 2 டீஸ்பூன் கோதுமை மாவு

  • முந்திரி திராட்சை வறுத்து எடுக்கவும்

  • 1 கப் நெய்

  • 1 கப் சர்க்கரை

  • புட் கலர்

  • வெண்ணிலா எசன்ஸ்

Preparation

  • கடாயில் 1 கப் திணையை நன்கு வறுத்து எடுக்கவும்.

  • பின் ஆறவிட்டு மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும்.

  • கடாயில் நெய் விட்டு முந்திரி திராட்சை வறுத்து எடுக்கவும்.

  • பின் சிறிது நெய் விட்டு அரைத்து வைத்துள்ள திணை பொடியை சேர்த்து நன்கு கிளறி விடவும். கோதுமை மாவு, வெந்நீர் சேர்த்து நன்கு கிளறி விடவும்.அவ்வப்போது சிறிது நெய் விட்டு கிளறி விடவும்.

  • பின் புட் கலர்,சர்க்கரை, முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கிளறி விடவும். நன்றாக திரண்டு வரும் போது இறக்கி விடவும்.

bottom of page