top of page

திணை அரிசி போளி

Prep Time:

25Minutes

Cook Time:

10Minutes

Serves:

3Servings

Level:

Advanced

About the Recipe

திணை கப நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. காய்ச்சல், சளி இருக்கும் போது திணை அரிசி கஞ்சி குடித்து வந்தால் அதன் வேகத்தை கட்டுப்படுத்தும். காய்ச்சல் காலங்களில் இவை எப்போதுமே உடலுக்கு நன்மை பயக்கும்.

Ingredients

  • திணை அரிசி - ஒரு கப்,

  • வெல்லம் - கால் கப்

  • முந்திரி - ஒரு டீஸ்பூன்

  •  ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

  • தேங்காய் துருவல் - கால் கப்

  •  மைதாமாவு - ஒரு கப்

  • மெல்லிய ரவை - கால் கப்

  • நெய் - தேவையான அளவு

  • உப்பு - கால் டீஸ்பூன்

Preparation

  • அரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து நிழலில் உலர்த்தி மாவாக அரைத்துக் கொள்ளவும்.

  • வெல்லத்தை கால் கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, திரும்பவும் அடுப்பில் வைக்கவும். இதில் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து, அரைத்து வைத்துள்ள அரிசிமாவை சிறிது சிறிதாக கொட்டி, கிளறி சிறிது நெய் ஊற்றி இறக்கவும்.

  • ரவை, மைதா, உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து ,எண்ணெய் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

  • இதை சிறிய அப்பளங்களாக இட்டு, அரிசி மாவு பூரணத்தை வைத்து போளிகளாக தட்டி தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும்.

bottom of page