top of page

திணை அரிசி பாயாசம்

Prep Time:

20Minutes

Cook Time:

25Minutes

Serves:

5Servings

Level:

Beginner

About the Recipe

நீண்ட நேரம் உக்கார்ந்த இடத்திலேயே இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு தசைப்பிடிப்பு மற்றும் கால் மருத்து போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவர்கள் திணை அரிசியை சாப்பிட்டு வர நரம்புகளில் ரத்த ஓட்டம் சீராக இருக்கவும், உடலின் அனைத்து செல்களுக்கும் பிராண வாயு என்று சொல்லக்கூடிய ஆக்சிஜன் பரிமாற்றம் சீராக இருக்கவும் உதவி செய்கிறது.

Ingredients

  • 3/4 கப் திணை அரிசி

  • 1/4 கப் பாசிப்பருப்பு

  • 1 1/2 கப்  வெல்லம்

  • 4 ஏலக்காய்

  • 10 முந்திரி

  • 15 உலர் திராட்சை

  • 1 1/2 கப் தேங்காய்பால்

  • 2 டீஸ்பூன் நெய்

Preparation

  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வாசனை வரும்வரை திணை அரிசியை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அதேபோல் பாசிப்பருப்பையும் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.ஒரு குக்கரில் ஒரு கப் அரிசி,பருப்புக்கு 3 கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு இறக்கவும். இதற்கிடையில் வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

  • விசில் ஆறியதும் அதில் வடித்து வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து 5 நிமிடம் நன்றாக கலந்துகொள்ளவும்.பின்னர் ஏலக்காய் தட்டி சேர்த்துக் கொள்ளவும்.தேங்காய் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பாயாசம் பதத்திற்கு சிம்மில் வைத்து 2 நிமிடம் கலந்து விடவும்.ஒரு தாளிப்பு கடாயில் இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு அதில் முந்திரி உலர் திராட்சை பொன்னிறமாக பொரித்து பாயாசத்துடன் சேர்க்கவும். இப்பொழுது சுவையான ஆரோக்கியமான திணை அரிசி பாயாசம் தயார்.

bottom of page