top of page

திணை அரிசி பணியாரம்

Prep Time:

15Minutes

Cook Time:

7Minutes

Serves:

3Servings

Level:

Intermediate

About the Recipe

நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சத்து அதிகம் மிகுந்த அரிசி உணவுகளை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நீரிழவு நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு அவர்கள் எந்த வகையான உணவுகளை சாப்பிட்டாலும் அவர்களின் உடல், அவ்வுணவின் முழுமையான சக்தியை பெறாமல் இருக்கும். இவர்கள் திணை உணவுகளை சாப்பிடுவதால் நீரிழிவால் இழந்த உடல் சக்தியை மீண்டும் பெற இயலும்.

Ingredients

  • 1 கப்  திணைஅரிசி

  • 1/4 கப் உளுந்து

  • தேவையானஅளவு உப்பு

  • தேவையானஅளவு எண்ணெய்

தாளிப்பதற்கு

  • 1 பெரிய வெங்காயம்

  • 1/4 தேக்கரண்டி கடுகு

  • 1 மேஜைக்கரண்டி கடலை பருப்பு

  • 3 காய்ந்த மிளகாய்

  • 2 மேஜைக்கரண்டி எண்ணெய்

  • 1/2 தேக்கரண்டி சீரகம்

  • 5 கருவேப்பிலை

Preparation

  • திணை அரிசி மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு சீரகம் கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளித்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் தயார் செய்துள்ள மாவில் சேர்த்து கலக்கவும்.

  • மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்து குழி பணியாரம் மாவு பதத்திற்கு தயார் செய்யவும்.

  • குழிப் பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து மாவை ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு முறுகலாக சுட்டு எடுக்கவும்.

  • மிகவும் ஆரோக்கியமான திணை அரிசி குழிப்பணியாரம் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.

bottom of page