top of page

தட்டப்பயறு கிரேவி

Prep Time:

4Minutes

Cook Time:

25Minutes

Serves:

5Servings

Level:

Intermediate

About the Recipe

காராமணியில் காணப்படும் மெக்னீசியமானது இன்சுலின் சுரப்பினை சீராக்கும். இதனால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். மேலும் இது உடல்சோர்வினை நீக்கி நல்ல தூக்கத்திற்கும் வழிவகை செய்கிறது.

Ingredients

  • காராமணி – ஒரு கப்

  • தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்)

  • பூண்டு – 2 பல்

  • பட்டை – ஒரு சிறிய துண்டு

  • பச்சை மிளகாய் – 1 அல்லது 2

  • கொத்தமல்லி – சிறிதளவு

  • எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

  • உப்பு – தேவையான அளவு

Preparation

  • காராமணியை முதல் நாள் ஊற வைக்கவும் (மாலையில் செய்வதானால் காலையில் ஊற வைக்கவும்).

  • ஊறிய காராமணியை குக்கரில் வேக வைக்கவும்.

  • கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், பட்டை சேர்க்கவும். வெங்காயம் வதக்கியதும் தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.

  • ஆறியதும் இதை விழுதாக அரைத்து, காராமணியுடன் சேர்த்துக் கொதிக்கவிடவும். உப்பு, கொத்தமல்லி சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் இறக்கவும்.

bottom of page