top of page

தட்டப்பயறு வத்தக்குழம்பு

Prep Time:

5Minutes

Cook Time:

30Minutes

Serves:

6Servings

Level:

Intermediate

About the Recipe

காராமணியானது குறைந்த கொழுப்பை கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்தானது நல்ல செரிமானத்தைத் தூண்டுவதுடன் அதிக பசி ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் காராமணியை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

Ingredients

  • 100 கிராம் காராமணி

  • எலுமிச்சை அளவு புளி

  • 3/4 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்

  • 2 ஸ்பூன் சாம்பார் தூள்

  • 1 ஸ்பூன் தனியா தூள்

  • ருசிக்கு உப்பு

தாளிக்க

  • 1 டீ ஸ்பூன் கடுகு

  • 3/4 டீ ஸ்பூன் வெந்தயம்

  • 1/2 டீ ஸ்பூன் துவரம்பருப்பு

  • 2 சிவப்பு மிளகாய்

  • 2 டீ ஸ்பூன் பெருங்காயத்தூள்

  • கறிவேப்பிலை

  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

  • தேவையான அளவு தண்ணீர்

Preparation


  • காராமணியை சுத்தம் செய்து 4 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் 1 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.


  • புளியை தண்ணீரில் ஊறவைத்து பின் நன்கு கரைத்து, பௌலில் வடிகட்டவும்.


  • அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு வெடித்ததும், து.பருப்பு, வெந்தயம், மிளகாய் தாளித்ததும், காராமணி, ம.தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.


  • வதக்கினதும் சாம்பார் தூள், தனியா தூள் சேர்த்து, 1 நிமிடம் எண்ணெயில் நன்கு வதக்கவும்.


  • பிறகு புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்து, புளி வாசனை போய் கெட்டியானதும் அடுப்பை நிறுத்தி விடவும்.


  • பெருங்காயத்தூள், கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.


  • இப்போது வித்தியாசமான, சுவையான, சுலபமான காராமணி வத்தக்குழம்பு தயார்.

bottom of page