top of page

தட்டப்பயறு மசால் வடை

Prep Time:

12Minutes

Cook Time:

10Minutes

Serves:

7Servings

Level:

Advanced

About the Recipe

காராமணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடேன்டுகள், விட்டமின் சி, புரதம் ஆகியவை சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடேன்டுகள் சருமம் முதிர்ச்சி அடைவதை தடை செய்து வயதான தோற்றம் ஏற்படாமல் சருமத்தை பாதுகாக்கிறது

Ingredients

  • 1 கப் ஊறவைத்த காராமணி பயிறு

  • 2 வெங்காயம்

  • 2 பச்சை மிளகாய்,2 வர மிளகாய்

  • ஒரு துண்டு இஞ்சி

  • 1/2 ஸ்பூன் சோம்பு

  • 1/2 ஸ்பூன் சீரகம்

  • 4 பல் பூண்டு

  • 2 ஸ்பூன் அரிசி மாவு

  • பொரிப்பதற்கு எண்ணெய்

  • கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு

Preparation

  • ஒரு மிக்ஸி ஜாரில் பச்சைமிளகாய், வரமிளகாய், சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.


  • அத்துடன் காராமணி பயிறு சேர்த்து தேவையான உப்பு சேர்த்து ஒன்றிரண்டாக தண்ணி விடாமல் அரைத்து எடுத்துக்கவும்.


  • அதில் கொஞ்சம் அரிசி மாவு மற்றும் பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து கையில் வைத்து வடைப்போல் தட்டி எடுத்து வைத்துக்கவும்.


  • கடாய் ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் மிதமான சூட்டில் சிறிய வடையாக எடுத்து எண்ணெயில் போட்டு இரண்டுபக்கவும் திருப்பி போட்டு வேக விட்டு எடுக்கவும்.


  • சுவையான ஆரோக்கியமான மொறு மொறு காராமணி மசால் வடை தயார்.

bottom of page