top of page

தட்டப்பயறு பொரியல்

Prep Time:

10Minutes

Cook Time:

20Minutes

Serves:

6Servings

Level:

Beginner

About the Recipe

காராமணியில் காணப்படும் விட்டமின் பி1 (தயாமின்) இதய நலத்திற்கு பெரிதும் உதவுகிறது. இந்த விட்டமின் இதய செயலிழப்பு போன்ற பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கிறது. மேலும் காராமணியில் காணப்படும் பிளவனாய்டுகள் இதயம் நன்றாகச் செயல்பட உதவுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்தானது உடலில் கொலஸ்ட்ரால் சேருவதைத் தடைசெய்வதோடு தமனிகளில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

Ingredients

  • கால் கிலோ காராமணி

  • ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்

  • அரைடீஸ்பூன் மஞ்சள் தூள்

  • தேவைக்கேற்ப உப்பு

  • சிறிதளவு தேங்காய்த் துருவல்

  • தாளிக்க வெங்காயம் ,கறிவேப்பிலை

Preparation

  • காராமணியை 6 மணி நேரம் ஊற வைத்து, பின் குக்கரில் 1 விசில் விட்டு வேக  வைத்துக்கொள்ள வேண்டும்.


  • பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம் போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். அதில் காராமணியை போட வேண்டும்.


  • பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.


  • பின்னர் தேங்காய் துருவலை சேர்த்து 2 சொட்டு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கி விடவும். சுவையான காராமணி ரெடி. தயிர் சாதத்திற்கு மிகவும் சிறந்த ஒரு சைடு டிஷ்ஷாக உள்ளது.


bottom of page