top of page

தட்டப்பயறு பிரியாணி

Prep Time:

15Minutes

Cook Time:

25Minutes

Serves:

4Servings

Level:

Intermediate

About the Recipe

உடலில் இரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டால் இரத்த சோகை நோய் ஏற்படும். காராமணியில் உள்ள இரும்புச் சத்தானது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது.

Ingredients

  • 1 கப் சீரகம் சம்பா அரிசி

  • 1 கப் காராமணி

  • 1 வெங்காயம்

  • 1 தக்காளி

மசாலா அரைப்பதற்கு

  • 2 பச்சை மிளகாய்

  • 1 துண்டு இஞ்சி

  • 5 பல் பூண்டு

  • 5 சாம்பார் வெங்காயம்

  • 1 டீஸ்பூன் சோம்பு

  • 1/2 டீஸ்பூன் கசகசா

தாளிக்க

  • 1 பட்டை, கிராம்பு,ஏலக்காய்

  • பிரிஞ்சி இலை

  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு

  • தேவையான அளவுஉப்பு

  • 4 டேபிள் ஸ்பூன் நெய்

  • மல்லி இலை

  • புதினா இலை

Preparation

  • காராமணியை நன்கு கழுவி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.


  • பின்னர் குக்கரில் தண்ணீர், உப்பு சேர்த்து மூன்று விசில் வைத்து வேகவைக்கவும்.


  • பெரிய வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாய், மல்லி,புதினா இலைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.


  • அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் எடுத்து மிக்ஸியில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.


  • ஒரு ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய்,பிரிஞ்சி இலை சேர்த்து பொரிந்ததும்,நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.


  • பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.


  • மசாலா நன்கு வதங்கியதும் காராமணி,ஊற வைத்து வைத்துள்ள சீரக சம்பா அரிசியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.


  • அத்துடன் உப்பு சேர்த்து கலந்து விடவும்.


  • அதன் பின் ஒன்றே முக்கால் கப் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.


  • கடைசியாக மல்லி, புதினா இலைகளை சேர்த்து, எலுமிச்சை சாறு,ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து மூடி வைத்து தண்ணீர் வற்றி வரும் வரை மிதமான சூட்டில் வேக வைக்கவும்.


  • பின்னர் எடுத்து தோசை தவாவை சூடு செய்து அதன் மேல் வைத்து பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேக வைக்கவும்.


  • பத்து நிமிடங்கள் போதும்,பிரியாணி தயாராகிவிடும்.பின்னர் எடுத்து நறுக்கி வைத்துள்ள மல்லி இலை,புதினா இலை, நெய் தூவி இறக்கவும்.


  • பின்னர் எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.


  • இப்போது மிகவும் சுவையான, சத்தான ஒரு வித்தியாசமான காராமணி பிரியாணி சுவைக்கத் தயார்.

bottom of page