top of page

தட்டப்பயறு சுண்டல்

Prep Time:

15Minutes

Cook Time:

25Minutes

Serves:

6Servings

Level:

Beginner

About the Recipe

காராமணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடேன்டுகள் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகின்றன. மேலும் இவை ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளைத் தடைசெய்கின்றன. இதனால் செல்களின் பாதிப்படைவது தடுக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் இதில் இருக்கும் ‘விட்டமின் சி’ உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Ingredients

  • 1 கப் உலர்ந்த காராமணி

  • 1 மேஜைகரண்டி தேங்காய்

  • 1 தேக்கரண்டி கடுகு

  • 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்

  • ½ தேக்கரண்டி வெந்தயம்

  • சிட்டிகை பெருங்காயம்

  • 1 தேக்கரண்டி இஞ்சி பொடியாக நறுக்கியது

  • ¼ தேக்கரண்டி மஞ்சள் பொடி

  • ¼ கப் கறிவேப்பிலை

  • 1 கப் தேங்காய் துருவல்

  • 1 மேஜைகரண்டி உளுந்து

  • 1 மேஜைகரண்டி கடலை பருப்பு

  • 4 வர

    மிளகாய்

  • தேவையானஉப்பு

Preparation


  • ஒரு கிண்ணத்தில் 3 கப் நீரில் காராமணி 4 மணி நேரம் ஊற வைக்க. நீரை பருகி காராமணி பெரிதாகும். பிரஷர் குக்கரில் வேகவைக்க. வெந்த பின் நீரை வடிக்க.மிதமான நெருப்பின் மேல் வாணலியில் உளுந்து, கடலை, தனியா, மிளகாய் தனி தனியாக வறுக்க. வாசனை வந்ததும் அடுப்பிலிருந்து எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு ஆற வைக்க. ஆறினதும் பிளெண்டரில் பொடித்து கொள்ளுங்கள்.

  • மிதமான நெருப்பின் மேல் வாணலியில் சூடான எண்ணெயில் கடுகு,பெருஞ்சீரகம், வெந்தயம் போட்டு தாளிக்க.உளுந்து, வர மிளகாய் சேர்க்க. உளுந்து, பொன் நிறமானதும் இஞ்சி, மஞ்சள் பொடி, கறிவேப்பிலை சேர்த்து கிளற. தேங்காய் துருவல் சேர்த்து வறுக்க. வேகவைத்து வடித்த காராமணி சேர்த்து 4 நிமிடங்கள் கிளறவும். பொடித்த மசாலா சேர்த்து கிளற.

  • உப்பு சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்க. சுண்டல் ருசிக்க தயார்.

bottom of page