top of page

தட்டப்பயறு கூட்டு

Prep Time:

20Minutes

Cook Time:

30Minutes

Serves:

5Servings

Level:

Intermediate

About the Recipe

காராமணியில் மெக்னீசியம் மற்றும் டிரிப்தோபன் என்னும் சத்து உள்ளது. இது உடலின் சோர்வினைப் போக்கி நல்ல தூக்கம் ஏற்பட வழிவகை செய்கிறது. தூக்கம் வராமல் தவிப்பவர்கள் தூங்கச் செல்வதற்கு முன்பு காராமணியை சாப்பிட்டுவிட்டு படுத்தால் நல்ல தூக்கத்தினைப் பெறலாம்.

Ingredients

  • ½ கப் காராமணி

  • 1 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய்

  • 1 தேக்கரண்டி கடுகு

  • 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்

  • 1 தேக்கரண்டி வெந்தயம்

  • ½ தேக்கரண்டி பெருங்காயம்

  • 1 கப் வெங்காயம் பொடியாக நறுக்கியது

  • 1 தேக்கரண்டி இஞ்சி துருவியது

  • 1 தேக்கரண்டி பூண்டு துருவியது

  • 1 கப் தக்காளி பொடியாக நறுக்கியது

  • 1 பச்சைமிளகாய் பொடியாக துருவியது

  • ¼ கப் கறிவேப்பிலை

  • 1 மேஜைகரண்டி மசாலா பொடி

  • 1 கப் தேங்காய்பால்

  • தேவையானஉப்பு

Preparation

  • சிகப்பு காராமணி , 3 கப் கொதிக்கும் நீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் 4 மணி நேரம் ஊற வைக்க. குக்கரில் வேகவைத்து 1 விசில் விடவும்.


  • மிதமான நெருப்பின் மேல் அடிகனமான பாத்திரத்தில் சூடான எண்ணெயில் கடுகு,பெருஞ்சீரகம்,உளுந்து,வெந்தயம், பெருங்காயம் போட்டு தாளிக் வெங்காயம், பச்சை மிளகாய் வதக்க. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து மஞ்சள் பொடி, கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்க .


  • 4 நிமிடம் கழித்து 2 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க, வேகவைத்த சிகப்பு காராமணி சேர்த்து கிளற. மசாலா பொடி, சேர்த்து கிளற. தேங்காய்பால், உப்பு சேர்த்து கிளற. 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்க.


  • அடுப்பிலிறிந்து எடுத்து பரிமாறும் கிண்ணத்தில் மாற்றவும் . சாதத்துடன் போதுமான கூட்டு, நெய் சேர்த்து.ருசிக்க சப்பாத்தி, பரோடா கூட பரிமாறலாம்

bottom of page