top of page

சுரைக்காய் கூட்டு

Prep Time:

15 Minutes

Cook Time:

45 Minutes

Serves:

7 Servings

Level:

Beginner

About the Recipe

அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நா வறட்சியை போக்கும்.
கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைபகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும். உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்தகாயை அடிக்கடி பயன்படுத்திவர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

Ingredients

  • 1 சுரைக்காய்

  • 1 பெரிய வெங்காயம்

  • 2 பச்சை மிளகாய்

  • 150 கிராம் பாசிப்பருப்பு

  • 1 டீ ஸ்பூன் சீரகத்தூள்

  • 1 டீ ஸ்பூன் மஞ்சள்தூள்

  • 1\2 டீ ஸ்பூன் கடுகு

  • 1/2 டீ ஸ்பூன் சீரகம்

  • 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்

  • 2 கொத்து கறிவேப்பிலை

  • தேவையான அளவு உப்பு

Preparation

  • சுரைக்காயை தோல் சீவி முழுதாக கழுவிய பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.

  • ஒரு கடாயில் பாசிப்பருப்பை சேர்த்து நன்கு கழுவி ஒன்றரை கப் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

  • ஒரு கொதி வந்ததும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பருப்பு முக்கால் பதம் வெந்ததும் நறுக்கிய காயை சேர்க்கவும்.

  • இப்போது இதனை நன்கு கலந்து விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

  • தேவைக்கேற்ப உப்பு சேர்த்து இரண்டு பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறி அதையும் சேர்த்து மீண்டும் 5 முதல் 10 நிமிடம் காயை நன்கு வேக விடவும்.

  • இப்போது காய் வெந்ததும் மற்றொரு அடுப்பில் சிறு கடாயை வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

  • இப்போது தாளித்ததை கூட்டுடன் சேர்த்து அடுப்பை அதிக தணலில் வைத்து 2 நிமிடங்கள் நன்கு கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.

bottom of page