top of page

சீரக சம்பா வெண்பொங்கல்

Prep Time:

10 Minutes

Cook Time:

20 Minutes

Serves:

4 Servings

Level:

Beginner

About the Recipe

அரிசி உருவத்தில் சீரகத்தை ஒத்து இருப்பதால் சீரக சம்பா என பெயர் பெற்றது.
ஊரையே கூட்டி மணக்கும் மல்லியை போல மணக்கும் அரிசி தான் சீரக சம்பா அரிசி.
செலினியம் நல்ல சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன் ஆகும். இது நமது செல்கள் ஆக்ஸினேற்ற அழுத்தத்தால் அழிவதிலிருந்து காக்கிறது.
இது குடல், சிறுகுடல் மற்றும் மார்பக புற்றுநோயிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது.
இதயம் தொடர்பான நோய்களிலிருந்தும் நம்மைக் காக்கிறது.
மன நல ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவுகிறது.
ஆஸ்துமா அறிகுறிகளிலிருந்து நம்மைத் தடுக்க உதவுகிறது.
அரிசியில் உள்ள செலினியம் அழற்சியைக் குறைக்க உதவுகிறது மற்றும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
இதில் சோடியம் இருப்பதால் நம்முடைய இரத்த அழுத்தத்தைப் பராமரிப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
சீரக சம்சா அரிசி ஒரு மலமிளக்கியாகச் செயல்படக் கூடியது. எனவே மலச்சிக்கலைத் தடுக்கும்.

Ingredients

  • 1 கப் சீரக சம்பா அரிசி

  • 1/4 கப் பாசி பருப்பு

  • தலா 1/2 ஸ்பூன் மிளகு, சீரகம்

  • 1 பச்சை மிளகாய்

  • கறிவேப்பிலை

  • 1/4 ஸ்பூன் இஞ்சி துருவல்

  • 1/4 கப் நெய்

  • 1 டேபிள்ஸ் பூன் நல்லெண்ணெய்

Preparation

  • ஒரு கப் சீரக சம்பா அரிசியுடன் கால் கப் பாசிப் பருப்பு எடுத்துக் கொள்ளவும்.

  • அரிசியை நன்கு கழுவி தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும் அடுப்பில் குக்கரை வைத்து காய்ந்ததும் நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் ஊற்றவும். அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து பொரியவிடவும்.

  • பிறகு கறிவேப்பிலை சிறிய பச்சைமிளகாய் இஞ்சித் துருவல் சேர்த்து அடுப்பை குறைத்து வைத்து சிறிது வதக்கி விடவும்.

  • அனைத்தும் ஒருசேர வதங்கியதும் அரிசியையும் பருப்பையும் சேர்க்கவும்.

  • இதனை 1 நிமிடம் நன்கு வறுத்துவிடவும். பிறகு 4 கப்தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.(3 1/2 முதல் 4 கப் வரை தண்ணீர் ஊற்றலாம்).

  • 4 விசில்விட்டு அடுப்பை அனைத்து விசில் அடங்கியதும் திறக்கவும்.

  • இறுதியாக கால்கப் அளவு காய்ச்சிய நெய் விட்டு நன்கு கிளறிவிடவும். இதற்கு தேங்காய்சட்னி பெஸ்ட் காம்போ.

bottom of page