top of page

சீரகசம்பா வெஜிடபிள் பிரியாணி

Prep Time:

15Minutes

Cook Time:

25Minutes

Serves:

3Servings

Level:

Intermediate

About the Recipe

சீரக சம்பா அரிசி உடலுக்கு நிறைய ஆற்றலை அளிக்கக் கூடிய தானியமாகும். 100 கிராம் அரிசியில் 170 கிலோ கலோரியும் அதே நேரத்தில் கொழுப்பு இல்லாத உணவாகும். எனவே எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாகும்.

Ingredients

  • 1 கப் சீரக சம்பா அரிசி

  • 2 கேரட்

  • 10 பீன்ஸ்

  • 1 உருளைக்கிழங்கு

  • 1 நூல்கோல்

  • 1 கப் பச்சை பட்டாணி

  • 1 கைப்பிடி மீள் மேக்கர்

  • 1 டீ ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்

  • 1 கைப்பிடி சிறியவெங்காயம்

  • 2 தக்காளி

  • 1 கைப்பிடி புதினா

  • 1 அங்குலம் பட்டை

  • 2 கிராம்பு

  • 1 ஏலக்காய்

  • 1 பிரியாணி இலை

  • 4 டேபிள் ஸ்பூன் நெய்

  • 1 டேபிள் ஸ்பூன் தயிர்

  • 1 பெரிய வெங்காயம்

  • 2 வர மிளகாய்

  • 1 டீ ஸ்பூன் மிளகாய்த்தூள்

  • உப்பு தேவையான அளவு

  • கொத்தமல்லி தழை சிறிதளவு

Preparation

  • முதலில் காய்கறிகளை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சிறிய வெங்காயத்தை மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும். தக்காளி வர மிளகாய் இவற்றை மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும். மீல்மேக்கரை சுடுதண்ணீரில் போட்டு எடுத்துக் கொள்ளவும்.

  • சுத்தம் செய்து புதினாவை ஒரு கைப்பிடி எடுத்து கொள்ளவும். ஊறவைத்த பட்டாணியை குக்கரில் 1 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும். சீரக சம்பா அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

  • ஒரு குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, இஞ்சி பூண்டு பேஸ்ட், புதினா இவற்றை வதக்கவும். சிறிய வெங்காயம் பேஸ்ட் நன்கு வதக்கவும். தக்காளி பேஸ்டை சேர்த்து சுருண்டு வரும் வரை வதக்கவும். பெரிய வெங்காயம் இவற்றைச் சேர்த்து வதக்கவும். பிறகு அரிந்து வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும். பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து வதக்கவும்.

  • பிறகு ஊற வைத்த சீரக சம்பா அரிசியை சேர்த்து ஒன்னே முக்கால் அளவு டம்ளர் தண்ணீர் விட்டு தேவையான உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும். விசில் அடங்கிய பின் குக்கரைத் திறந்து 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கிளறி கொத்தமல்லி இலைகளை தூவி சூடாகப் பரிமாறவும்.

bottom of page