top of page

சீரகசம்பா புலாவ்

Prep Time:

20Minutes

Cook Time:

20Minutes

Serves:

3Servings

Level:

Beginner

About the Recipe

சீரக சம்பா அரிசியில் நிறைய அளவுக்கு செலினியம் காணப்படுகிறது. செலினியம் ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் ஆகும். இது உங்க செல்கள் ஆக்ஸினேற்ற அழுத்தத்தால் அழிவதில் இருந்து காக்கிறது. இது குடல், சிறுகுடல் மற்றும் மார்பக புற்றுநோயில் இருந்து காக்கிறது. இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை காக்கிறது.

Ingredients

  • 180gm சீரக சம்பா அரிசி

  • 350ml தண்ணீர்

  • 3 ஸ்பூன் நெய்

  • 3 ஸ்பூன் ஆயில்

  • பட்டை ஒரு துண்டு

  • 1 கிராம்பு

  • 1 ஏலக்காய்

  • 1 பிரிஞ்சி இலை

  • 3 பச்சைமளகாய்

  • 1 கப் பச்சை பட்டாணி

  • 4 ஸ்பூன் பொடியாக அரிந்த கேரட்

  • 1 பெரிய வெங்காயம்

  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்

  • 4 முந்திரி

  • உப்பு தேவையான அளவு

Preparation

  • ஒரு ஆழாக்கு சீரக சம்பா அரிசியை இரண்டு முறை கழுவி 2 ஆழாக்கு தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். பச்சை பட்டாணி ஒரு கப் உரித்து வைக்கவும். கேரட் பொடியாக அரிந்து வைக்கவும். பெரிய வெங்காயம் 1 நீளவாக்கில் அரிந்து வைக்கவும்.

  • காரத்திற்கு ஏற்றாற்போல் 2 அல்லது 3 பச்சை மிளகாயை நடுவில் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பட்டை ஒரு துண்டு,கிராம்பு 2, ஏலக்காய் ஒன்று, பிரிஞ்சி இலை எடுத்துவைக்கவும். குக்கரில் நெய் 3 ஸ்பூன், ஆயில் 3 ஸ்பூன் சேர்த்து சூடானதும் மசாலா பொருட்களை போட்டு தாளிக்கவும். நீளவாக்கில் அரிந்த பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.பச்சை வாசனை போனதும் பச்சை பட்டாணி, கேரட், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கி தேவையான உப்பு சேர்க்கவும்.

  • 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஊற வைத்த சீரக சம்பா அரிசியை அதில் கலந்து விடவும். அரை மணி நேரம் ஊறினால் போதுமானது. அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு விசில் விடவும். 10 நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும் மெதுவாக கலந்து விடவும் சுவையான சீரக சம்பா புலவு சாதம் தயார். குடைமிளகாய் இருந்தால் நீள வாக்கில் அரிந்து வதக்கி சேர்க்கலாம்.

  • தேவைப்பட்டால் முந்திரி நெய்யில் வறுத்து மேலே தூவி அலங்கரிக்கலாம்.நான் அவசரத்தில் செய்த புலாவ் சாதம் மிகவும் சுவையாக இருந்தது. பாசுமதி அரிசியில் புலாவ் சாதம் செய்வோம். நான் சீரக சம்பா அரிசியில் செய்தேன். வெஜ் குருமா சைடிஷ் சேர்த்து சாப்பிட சுவையாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள்.

bottom of page