top of page

சீரகசம்பா பால் பாயாசம்

Prep Time:

10Minutes

Cook Time:

40Minutes

Serves:

10Servings

Level:

Intermediate

About the Recipe

மன நல ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. தைராய்டு சுரப்பி செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் ஹார்மோன் சமநிலையின்மையை தடுக்க உதவுகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து போராட உதவுகிறது.

Ingredients

  • 1/2 கப் சீரக சம்பா

  • 6 கப் பால்

  • 1/2 கப் கண்டேன்ஸ்ட் பால்

  • 2 தேக்கரண்டி குங்குமப்பூ

  • 2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி

  • 1 கப் சர்க்கரை


  • உப்புதேவைக்கேற்ப

  • 2 மேஜைகரண்டி வெண்ணை

  • 1/2 கப் உலர்ந்த திராட்சை

  • 1/2 கப் முந்திரி

  • 1/4 கப் வால்நட் துண்டுகள்


Preparation

  • ஒரு கிண்ணத்தில் 1 கப் பால் , 1 கப் நீருடன் அரிசியை பிரஷர் குக்கரில் குழைய வேகவைக்க. மிதமான நெருப்பின் மேல் பாலை ஒரு பெரிய பாத்திரத்தில் கொதிக்க வைக்க. கொதிக்கும் பாலில் வேகவைத்த அரிசியை சேர்க்க. நன்றாக கொதிக்கட்டும். குங்குமப்பூ சேர்க்க. அடிபிடிக்காமல் இருக்க கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் . பால் நிறம் மஞ்சள் நிறம் ஆகும். கண்டேன்ஸ்ட் பால் ஊற்றி கிளறுக. ஏலக்காய் பொடி சேர்த்து கிளற. நெருப்பை குறைக்க. பால் மேலும் 15 நிமிடங்கள் கொதித்து சுண்டட்டும்.

  • சர்க்கரை சேர்க்க. மேலும் 5 நிமிடங்கள் கொதித்து சுண்டட்டும். சிட்டிகை உப்பு சேர்த்து கிளற. அடுப்பை அணைக்க.

  • மிதமான நெருப்பின் மேல் சாஸ் பேன் வைக்க வெண்ணை சேர்க்க. உறுகியவுடன் நெருப்பை குறைத்து முந்திரி, திராட்சை வறுக்க. 1-2 நிமிடங்கள் திராட்சை உப்பும், முந்திரி சிவக்கும். இதை பாயாசத்துடன் சேர்த்து கிளற. வால்நட் துண்டுகள் சேர்க்க, அழகிய நிறம், மிகுந்த சுவை கொண்ட பாயாசம் தயார். ருசித்து பரிமாறுக.

bottom of page