top of page

சீரகசம்பா பன்னீர் புலாவ்

Prep Time:

15 Minutes

Cook Time:

30 Minutes

Serves:

3 Servings

Level:

Advanced

About the Recipe

அரிசி உருவத்தில் சீரகத்தை ஒத்து இருப்பதால் சீரக சம்பா எனபெயர்பெற்றது.
ஊரையே கூட்டி மணக்கும் மல்லியை போல மணக்கும் அரிசி தான் சீரக சம்பா அரிசி.
செலினியம் நல்ல சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன் ஆகும். இது நமது செல்கள் ஆக்ஸினேற்ற அழுத்தத்தால் அழிவதிலிருந்து காக்கிறது.
இது குடல், சிறுகுடல் மற்றும் மார்பக புற்றுநோயிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது.
இதயம் தொடர்பான நோய்களிலிருந்தும் நம்மைக் காக்கிறது.
மன நல ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
தைராய்டு சுரப்பி செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் ஹார்மோன் சமநிலையின்மையைத் தடுக்க உதவுகிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவுகிறது.
ஆஸ்துமா அறிகுறிகளிலிருந்து நம்மைத் தடுக்க உதவுகிறது.
அரிசியில் உள்ள செலினியம் அழற்சியைக் குறைக்க உதவுகிறது மற்றும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
இதில் சோடியம் இருப்பதால் நம்முடைய இரத்த அழுத்தத்தைப் பராமரிப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
சீரக சம்சா அரிசி ஒரு மலமிளக்கியாகச் செயல்படக் கூடியது. எனவே மலச்சிக்கலைத் தடுக்கும்.

Ingredients

  • 1 கப் சீரக சம்பாஅரிசி

  • தேவைக்கு பன்னீர்

  • சிறிதளவு பேபி கார்ன்

  • பெரிய வெங்காயம்

  • 1டேபிள் ஸ்பூன் வத்தல் தூள்

  • 1 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்

  • 1/2டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள்

  • 1 கேரட்

  • சிறிதளவு பீன்ஸ்

  • 1 பட்டை

  • 1 அன்னாசிப்பூ

  • பிரியாணி இலை

  • 1 டேபிள் ஸ்பூன் நெய்

  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

  • தேவைக்கு உப்பு

  • தேவைக்கு தண்ணீர்

Preparation

  • இது செய்வதற்கு தேவையான காய்களை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும் .பின்பு  தேவையான பன்னீரை பொரித்தெடுக்க வேண்டும்.

  • குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து பின்பு அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிபூ ஆகியவற்றை சேர்க்க வேண்டும். அடுத்து நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை அதனோடு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

  • வெங்காயம் வதங்கிய பின்பு அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் மற்ற காய்கறிகளை அதனோடு சேர்க்க வேண்டும். பின்பு அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் கரம்மசாலா சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

  • ஊற வைத்து வைத்திருக்கும் சீரகசம்பா அரிசியை அதனோடு சேர்க்க வேண்டும். அடுத்து பொரித்து வைத்திருக்கும் பன்னீரையும் அதனுடன் சேர்க்க வேண்டும். பின்பு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது மிதமான சூட்டில் ஒரு விசில் வரும் வரை காத்திருக்கவும்.

  • ஒருவிசில் வந்தவுடன் ஸ்டவ்வை ஆஃப் செய்ய வேண்டும். விசில் அடங்கியதும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து பரிமாறவும்.

bottom of page