top of page

சீரகசம்பா சிக்கன் பிரியாணி

Prep Time:

25 Minutes

Cook Time:

25 Minutes

Serves:

4 Servings

Level:

Intermediate

About the Recipe

அரிசி உருவத்தில் சீரகத்தை ஒத்து இருப்பதால் சீரக சம்பா எனபெயர்பெற்றது.
ஊரையே கூட்டி மணக்கும் மல்லியை போல மணக்கும் அரிசி தான் சீரக சம்பா அரிசி.
செலினியம் நல்ல சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன் ஆகும். இது நமது செல்கள் ஆக்ஸினேற்ற அழுத்தத்தால் அழிவதிலிருந்து காக்கிறது.
இது குடல், சிறுகுடல் மற்றும் மார்பக புற்றுநோயிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது.
இதயம் தொடர்பான நோய்களிலிருந்தும் நம்மைக் காக்கிறது.
மன நல ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
தைராய்டு சுரப்பி செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் ஹார்மோன் சமநிலையின்மையைத் தடுக்க உதவுகிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவுகிறது.
ஆஸ்துமா அறிகுறிகளிலிருந்து நம்மைத் தடுக்க உதவுகிறது.
அரிசியில் உள்ள செலினியம் அழற்சியைக் குறைக்க உதவுகிறது மற்றும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
இதில் சோடியம் இருப்பதால் நம்முடைய இரத்த அழுத்தத்தைப் பராமரிப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
சீரக சம்சா அரிசி ஒரு மலமிளக்கியாகச் செயல்படக் கூடியது. எனவே மலச்சிக்கலைத் தடுக்கும்.

Ingredients

  • சீரக சம்பா அரிசி 2 கப்

  • சிக்கன்1/2 கிலோ

  • பெரிய வெங்காயம் 1

  • தக்காளி 1

  • கொத்தமல்லி 1 கப் (நறுக்கியது)

  • பச்சை மிளகாய் 2

  • மஞ்சள்தூள் ½ டீ ஸ்பூன்

  • மிளகாய்தூள் 1 டேபிள் ஸ்பூன்

  • தனியாதூள் 2 டேபிள் ஸ்பூன்

  • உப்பு தேவையான அளவு

  • எண்ணெய் தேவையானஅளவு

  • இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்

  • பட்டை, கிராம்பு, ஏலக்காய் 2

  • பிரியாணி இலை 1

Preparation

  • முதலில் வெங்காயத்தையும் மற்றும் தக்காளியையும் தனிதனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு பச்சைமிளகாய் மற்றும் கொத்தமல்லி தழையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.  பின்பு ஒருபாத்திரத்தில் சிக்கனுடன் அரைத்து வைத்த வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி தழை மற்றும் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்தூள், தனியாதூள், தயிர், இஞ்சி, பூண்டுபேஸ்ட் எல்லாவற்றையும் சேர்த்து கலந்து அரை மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

  • பின்புகுக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் கொஞ்சம் நெய் சேர்த்து பின்னர் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணிஇலை போட்டு பின்பு அதில் ஊற  வைத்த சிக்கனை போட்டு சிறிது நேரம் வேக விடவும். வேக வைத்த பின்பு அதில் அரிசியையும் போட்டு கிளறி விட்டு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விட்டு இரண்டு விசில் விட்டு பத்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.

bottom of page