top of page

சீரகசம்பா கேசரி பாத்

Prep Time:

5Minutes

Cook Time:

40Minutes

Serves:

6Servings

Level:

Beginner

About the Recipe

ஆஸ்துமா அறிகுறிகளில் இருந்து நம்மை தடுக்க உதவுகிறது. இந்த அரிசியில் உள்ள செலினியம் அழற்சியை குறைக்க உதவுகிறது மற்றும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து நம்மை காக்க உதவுகிறது.

Ingredients

  • 1/2 கப் சீரக சம்பா அரிசி

  • 2 தேக்கரண்டி குங்குமப்பூ

  • 2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி

  • 1 கப் சர்க்கரை

  • உப்பு தேவைக்கேற்ப

  • 1/4 கப் நெய்

  • 10 கிராம்பு

  • 1/4 கப் உலர்ந்த திராட்சை

  • 20 முந்திரி

Preparation

  • குங்குமப்பூவை 1 மேஜைகரண்டி கொதிக்கும் நீரில் ஊறவைக்க, நன்றாக கரையும், சிகப்பு நிறம் வரும்.

  • ஒரு கிண்ணத்தில் 1½ கப் நீருடன் அரிசியை பிரஷர் குக்கரில் குழைய வேகவைக்க. பின் மிதமான நெருப்பின் மேல் ஒரு பெரிய பாத்திரத்தில் 3 கப் நீருடன் சேர்த்து குழைந்த அரிசியை கொதிக்க வைக்க. குழைந்த பின் கரைத்து வைத்துள்ள குங்குமப்பூ தண்ணீர் சேர்க்கவும் . அடிபிடிக்காமல் 10 நிமிடங்கள் கிளறிக்கொண்டே இருக்கவும் .

  • சர்க்கரை சேர்க்க, இளகும். மேலும் 5 நிமிடங்கள் சுண்டட்டும். ஏலக்காய் பொடி, உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து மூடி வைக்கவும்.

  • மிதமான நெருப்பின் மேல் சாஸ் பேன் வைத்து நெய் ஊற்றி கிராம்பை வறுத்து கேசரியுடன் சேர்க்க.

  • அதே சாஸ் பேனில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சை வறுக்கவும் . இதை கேசரியுடன் சேர்த்து கிளறவும். அழகிய நிறம், மிகுந்த சுவை கொண்ட கேசரி பாத் தயார். வேறொரு கிண்ணத்தில் மாற்றுக. ருசித்து பரிமாறுக.

bottom of page