top of page

சீரகசம்பா காளான் பிரைட் ரைஸ்

Prep Time:

10Minutes

Cook Time:

30Minutes

Serves:

3Servings

Level:

Beginner

About the Recipe

சீரக சம்பா அரிசி குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது. இது செரிமானத்திற்கு உதவி செய்யும். உணவு பசியை அடக்க உதவுகிறது. இது நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும். இந்த அரிசி உணவு ஜீரணமாகும் போது இரத்தத்தில் சர்க்கரை வெளியீடு மெதுவாக இருக்கும். எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஏற்றது.

Ingredients

  • 1 டம்ளர் சீரக சம்பா அரிசி

  • 3 கிராம்பு

  • 1 பட்டை

  • 1 குடை மிளகாய்

  • 1 பாக்ஸ் காளான்

  • 1 பெரிய வெங்காயம்

  • 1 ஸ்பூன் சீரகம்

  • 1 ஸ்பூன் மிளகு

  • 2 ஸ்பூன் நெய்

  • 1 குழிகரண்டி சமையல் எண்ணெய்

  • தேவையான அளவு உப்பு

  • தேவையான அளவு தண்ணீர்

  • 1 கொத்து கொத்தமல்லி இலை

Preparation

  • சீரக சம்பா அரிசியை மூன்று முறை கழுவி குக்கரில் போட்டு 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து பட்டை கிராம்பு சேர்த்து 1 விசில் விட்டு இறக்கவும் விசில் அடங்கியதும் சாதத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஆற வைக்கவும்

  • வெங்காயம், குடைமிளகாய், காளான் நீளநீளமாக நறுக்கி வைக்கவும் அடுப்பில் கடாயை வைத்து ஒரு குழிக்கரண்டி சமையல் எண்ணெயை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் காளான், குடை மிளகாய் போட்டு வதக்கவும்.

  • சீரகம், மிளகு உரலில் போட்டு இடித்து சேர்த்து கிளறவும். பிறகு ஆறவைத்த சாதத்தை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மெதுவாக அடி வரை கிளறி விடவும்.

  • நெய் ஊற்றி லேசாக கிளறி விட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். சீரகசம்பா காளான் ரைஸ் ரெடி.

bottom of page