top of page

சிகப்பு அரிசி ஆப்பம்

Prep Time:

20 Minutes

Cook Time:

5 Minutes

Serves:

5 Servings

Level:

Beginner

About the Recipe

உடம்பில் சுரக்கும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.
கர்ப்பிணி பெண்கள் ஆறு மாத காலத்தில் பூங்கார் அரிசியை கஞ்சி வைத்து குடித்து வர வேண்டும்.
இவ்வாறு செய்யும் போது அவர்களுக்கு சுகப்பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த அரிசியில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், ஆன்டியாக்ஸிடன்டுகள் மற்றும் தயாமின் போன்ற சத்துக்கள் உள்ளன.
வயிறு உபாதைகள் மற்றும் குடல்புண் (அல்சர்) உகந்த உணவாகும்.
பூப்பெய்தும் காலங்களில் இந்த அரிசியில் புட்டு செய்து சாப்பிட்டு வர இடுப்பு, வயிறு, கால்வலி நீங்கும்.
தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் பிறக்கும் குழந்தையும் (Healthy Baby) ஆரோக்கியமாக இருக்கும்.

Ingredients

  • 1 கப் சிகப்பு அரிசி (பூங்கார்)

  • 1 கப் பச்சரிசி

  • 1 கப் தேங்காய்

  • 4 டேபிள் ஸ்பூன் புளிச்ச மாவு

  • உப்பு

Preparation

  • சிகப்பு அரிசி ஒரு கப் எடுத்து எட்டு மணி நேரம் ஊற வைக்கணும். பச்சரிசி ஒரு கப் எடுத்து இரண்டு மணிநேரம் ஊற வைக்கணும். சிகப்பரிசி, பச்சரிசி, தேங்காய் துருவல் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பா அரைச்சு எடுத்துக்கலாம்.

  • அரைத்த மாவில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கையை வைத்து நன்கு கலந்து விடலாம். மாவு புளிக்கிறதுக்கு ஒரு எட்டு மணி நேரம் அப்படியே வைக்கணும்.

  • காலையில மாவு புளிச்சுடுச்சு.

  • ஆப்ப சட்டியில் ‌இல்லண்ணா‌ தோசை கல்லில் ‌ கூட ஊத்தலாம்.

bottom of page