top of page

சாமை முறுக்கு

Prep Time:

25Minutes

Cook Time:

10Minutes

Serves:

6Servings

Level:

Advanced

About the Recipe

உடல் வலியை நீக்கி உடலுக்கு தேவையான சக்தியை சாமை அரிசி கொடுக்கிறது.

Ingredients

  • கால் கிலோ சாமை

  • 150 கிராம் பொட்டுக்கடலை

  • 3 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்

  • உப்பு தேவையான அளவு

  • ஒரு ஸ்பூன் கருப்பு எள்ளு

  • எண்ணெய்

Preparation

  • முதலில் சாமை அரிசியை நன்றாக மூன்றிலிருந்து நான்கு முறை அலசி அதில் நல்ல தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.


  • நன்றாக ஊறிய சாமையை தண்ணீரை வடித்துவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


  • பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்து அதை சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.


  • அரைத்த அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேவையான அளவு உப்பு மற்றும் பொடித்த பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.


  • இதனுடன் வெண்ணெய்யை சூடாக உருக்கி இந்த மாவில் ஊற்றி சேர்த்து பிசையவேண்டும்.


  • ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் முறுக்கு பிழியும் அச்சில் இந்த மாவை சேர்த்து நன்றாக பிழிந்து எண்ணெயில் சேர்க்க வேண்டும்.


  • இதே போல் அனைத்து மாவையும் பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

bottom of page