top of page

சாமை பொங்கல்

Prep Time:

10Minutes

Cook Time:

20Minutes

Serves:

6Servings

Level:

Beginner

About the Recipe

சளி, ஆஸ்துமா போன்ற நுரையீரல் தொந்தரவுகளை சீர்செய்ய உதவும். இதற்கு சாமையை உணவாக எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Ingredients

  • 1 கப் சாமை

  • 1/2 கப் பாசிப்பருப்பு

  • 3 கப் தண்ணீர்

  • உப்பு

தாளிக்க

  • 3 டீஸ்பூன் நெய்

  • 1 டீஸ்பூன் சீரகம்

  • 1 டீஸ்பூன் மிளகு

  • 1 துண்டு இஞ்சி நறுக்கியது

  • 2 பச்சை மிளகாய் நறுக்கியது

  • 10 உடைத்த முந்திரி

  • 1/4 டீஸ்பூன் பெருங்காயம்

  • சிறிது கறிவேப்பிலை

Preparation

  • சாமை கழுவி 2 கப் தண்ணீர் ஊற்றி வைக்கவும். வெறும் கடாயில் பாசிப்பருப்பை 2 நிமிடம் வறுத்து கழுவி 1/2 கப் தண்ணீர் ஊற்றி வைக்கவும்.

  • குக்கரில் ஊறிய சாமையும் பாசிப் பருப்பையும் கலந்து உப்பு,தண்ணீர் ஊற்றி 4 விசில் வேக விடவும்.

  • கடாயில் 3 டீஸ்பூன் நெய் ஊற்றி சீரகம், மிளகு, இஞ்சி, பச்சை மிளகாய், உடைத்த முந்திரி பெருங்காயம் சிறிது கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக தாளித்து சாமை பாசிப்பருப்புடன் சேர்த்து விடவும்.

  • சுவையான சாமை பொங்கல் ரெடி. தேங்காய் பொட்டுக்கடலை சட்னி செய்து வைத்து பரிமாறினேன். மிகவும் சுவையாக இருந்தது.

bottom of page