top of page

சாமை பாயாசம்

Prep Time:

10Minutes

Cook Time:

25Minutes

Serves:

8Servings

Level:

Intermediate

About the Recipe

உடல் களைப்பு மற்றும் அசதியை போக்குகிறது. ஏனெனில் இது உடலில் தங்கியுள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது.

Ingredients

  • 100 gm சாமை

  • 150 gm வெல்லம் பொடித்தது

  • 1/2 டம்ளர் பால்

  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்

  • 1 டேபிள் ஸ்பூன் நெய்

  • 10 முந்திரி பருப்பு

  • 1/2 டீ ஸ்பூன் ஏலக்காய் சுக்கு பொடி

Preparation

  • சாமையை நன்கு வறுத்துக் கொள்ளவும். பிறகு தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று முறை கழுவி விட்டு தண்ணீரில் அரை மணி நேரம் வரை ஊற விடவும். பிறகு மூன்று டம்ளர் அளவு தண்ணீர் விட்டு நன்கு வேகவிடவும். 15நிமிடத்தில் வெந்துவிடும். கெட்டியாக இருந்தால் தேவைப்பட்டால் பாயாசம் வைக்கும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

  • சாமை வெந்த பிறகு வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து விட்டு கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்ததும் தேங்காய் துருவல், ஏலக்காய், சுக்கு பொடி,பால் சேர்த்து கலந்து விடவும். கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்க்கவும்.

  • சுவையான சாமை பாயாசம் தயார். சிறு தானியத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் வெல்லத்தில் உள்ள இரும்பு சத்து விரத காலத்தில் நமக்கு உடல் சக்தியைக் கொடுக்கும்.

bottom of page