top of page

சாமை நூடுல்ஸ்

Prep Time:

15Minutes

Cook Time:

45Minutes

Serves:

9Servings

Level:

Advanced

About the Recipe

சாமை அரிசியில் உண்ணக்கூடிய வடிவங்களில் டோகோபெரோல்ஸ், டோகோட்ரியெனோல்ஸ் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

Ingredients

  • சாமை அரிசி - 5 கப்

  • வெங்காயம் – 2

  •  தக்காளி – 2

  • குடமிளகாய் – 2

  • முட்டை கோஸ் – சிறிதளவு

  • பச்சை மிளகாய் – 3

  • எண்ணெய் - 4 ஸ்பூன்

  • கரம் மசாலா பொடி – சிறிதளவு

  • உப்பு - தேவையான அளவு

Preparation

  • சாமை நூடுல்ஸ் செய்வதற்கு முதலில் சாமை அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைக்கும்போது அதில் சிறிதளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.

  • பிறகு வாணலியை கேஸ் ஸ்டவ்வில் வைத்து மாவை ஊற்றி, அதில் எண்ணெயை ஊற்றி கிளறவும். பிறகு மாவு நிறம் மாறிக் கையில் ஒட்டாமல் பந்துபோல வரும்போது இறக்கவும்.

  • அதைச் சிறு உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து சூடாக இருக்கும்போதே இடியாப்ப அச்சில் போட்டுப் பிழிந்து வைக்கவும்.

  • பிறகு வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன், அதில் மெலிதாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய், முட்டைகோஸ், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, அதில் சிறிது கரம் மசாலா பொடியைத் தூவி, பிழிந்து வைத்திருக்கும் சாமையைப் போட்டு கிளறவும். சுவையான சாமை நூடுல்ஸ் தாயார்

bottom of page