top of page

சாமை தோசை

Prep Time:

15Minutes

Cook Time:

4Minutes

Serves:

9Servings

Level:

Beginner

About the Recipe

அரிசியை காட்டிலும் ஏழு மடங்கு அதிக நார்சத்து கொண்ட தானியம் சாமை. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவர முக்கிய பங்கு வகிப்பது நார்சத்து. இதனை உணவாக உட்கொள்ளும் போது சர்க்கரை நோயினை கட்டுப்படுத்தும், மேலும் ஆரம்ப நிலையில் உள்ள சர்க்கரை நோயை வராமல் தடுத்திடும்.

Ingredients

  • 1 கப் சாமை

  • 3 கப் இட்லி அரிசி

  • 1 கப் வெள்ளை முழு உளுந்து

  • உப்பு தேவையான அளவு

Preparation

  • சாமை, உளுந்து, அரிசி இவற்றை தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும்

  • மூன்றையும் நன்கு கழுவி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்

  • மிக்ஸி ஜாரில் உளுந்தை மட்டும் சேர்த்து நன்கு நைசாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்

  • அதே ஜாரில் சாமை மற்றும் இட்லி அரிசி சேர்த்து நன்கு நைஸாக அரைத்து எடுத்து உளுந்து மாவுடன் சேர்க்கவும்

  • இவை அனைத்தையும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கரைத்து 6 மணி நேரம் புளிக்க விடவும்

  • பிறகு மாவை தோசையாக வார்த்து சுற்றிலும் நல்லெண்ணெய் விட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்

bottom of page