top of page

சாமை திரட்டுப் பால் வித் பொன்னிற அன்னாசி சாஸ்

Prep Time:

30 Minutes

Cook Time:

40 Minutes

Serves:

5 Servings

Level:

Intermediate

About the Recipe

சாமை எலும்பை வலுப்படுத்தும்.
புரதமும் நிறைந்துள்ளது. இது எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது. தளர்ச்சியை போக்கி எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்க செய்கிறது.
உடலுக்கு வலிமை தரும்.
விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.
இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும்.
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்.

Ingredients

  • 1/4 கப் (50கி)சாமைஅரிசி

  • 500 மிலிபால்

  • 3 மேஜைக் கரண்டி மில்க் மெயிட்

  • நாட்டு சர்க்கரை தேவைக்கேற்ப

  • 1 தேக்கரண்டி ரோஸ் எஸன்ஸ்  (இதற்கு பதிலாக ஏலம்பொடி அல்லது பட்டை பொடி சேர்க்கலாம்)

  • வெண்ணிலா எஸன்ஸ்

  • அன்னாசி சாஸ்

  • 1 கப் நறுக்கிய அன்னாசிபழம்

  • 1/2 கப் நாட்டு சர்க்கரை

  • 1/2 தேக்கரண்டி வெண்ணெய்

Preparation

  • ஒரு தவாவில் நறுக்கிய அன்னாசி பழம் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து வதக்கவும்.

  • சர்க்கரை கரைந்து பழம் மசிந்து வரும் பொழுது வெண்ணெய் சேர்த்து கிளறவும். நன்கு கிளறி இறக்கி ஆற விடவும்.

  • தவாவில் சாமை அரிசி சேர்த்து மிதமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.  அதனை ஆற வைத்து பொடித்து எடுத்துக் கொள்ளவும்.

  • ஒரு அகல பாத்திரத்தில் பாலை சேர்த்து கொதிக்க விடவும்.

  • அதனுடன் அரைத்த பொடியை சேர்த்து கட்டி பிடிக்காமல் நன்கு கிளறவும். அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும். வத்தி பாதி அளவு வரும் வரை இடை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

  • அதனுடன் மில்க் மெயிட், சர்க்கரை, எஸென்ஸ் சேர்த்து கிளறி இறக்கவும்.


  • கிளறி இறக்கி ஆற விட்டு பரிமாறும் கப்களில் மாற்றி அன்னாசி சாஸ் சேர்த்து பரிமாறவும்.

bottom of page