top of page

சாமை சிக்கன் பிரியாணி

Prep Time:

15Minutes

Cook Time:

40Minutes

Serves:

3Servings

Level:

Intermediate

About the Recipe

சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம். இதனால் இரத்த சோகை நோய் வராமல் தடுக்கபடுகிறது. உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் சாமை மிகவும் இன்றியமையாதது.

Ingredients

  • சாமை அரிசி- ஒரு கப்

  • நாட்டுக்கோழி - 200 கிராம்

  • பெரிய வெங்காயம் - ஒன்று

  • எலுமிச்சைச்சாறு - அரை டீஸ்பூன்

  • மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

  • மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

  • சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்

  • இஞ்சி, பூண்டுவிழுது - 2 டீஸ்பூன்

  • புதினா - கால் கப்

  • கொத்தமல்லித்தழை - கால் கப்

  • ஏலக்காய் - 2

  • பட்டை - சிறிய துண்டு

  • கிராம்பு - 2

  • கல்பாசி - 1 சிறிய துண்டு

  • மிளகு - அரை டீஸ்பூன்

  • சோம்பு - அரை டீஸ்பூன்

  • நெய்/நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

Preparation

  • சாமை அரிசியை நன்றாக‌க் கழுவி வைக்கவும்.

  • நாட்டுக்கோழியை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

  • வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  • அடுப்பில் குக்கரை வைத்து நறுக்கிய கோழித்துண்டுகள், அதற்கு தேவையான அளவு உப்பு, இஞ்சி -பூண்டு விழுது, மிளகு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 25 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.

  • கோழி வெந்ததும் துண்டுகளை தனியாகவும், அதன் தண்ணீரை தனியாகவும் எடுத்து வைக்கவும்.

  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கல்பாசி, சோம்பு, கிராம்பை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து தாளிக்கவும்.

  • இத்துடன் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கியதும் புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.

  • பிறகு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  • இத்துடன் வேக வைத்த கோழி துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.

  • பிறகு, கோழி வேக வைத்த தண்ணீரை ஊற்றி (1 கப் சாமைக்கு 2 கப் தண்ணீர்) கொதிக்க விடவும்.

  • இத்துடன் சாமையைச் சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கிப் பரிமாறவும்.

  • சூப்பரான சாமை நாட்டுக்கோழி பிரியாணி ரெடி

bottom of page